ஹரித்வார் தர்ம சன்சத் நிகழ்ச்சி தொடர்பான வழக்கில், அண்மையில் இஸ்லாமிய மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறிய ஜிதேந்திர தியாகி என்ற இந்து மத சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வழக்கு தொடர்பாக செய்யப்படும் முதல் கைது நடவடிக்கை இதுவாகும்.
இவ்விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட மற்றவர்களான யதி நரசிம்மானந்த் மற்றும் சத்வி அன்னப்பூர்னா ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஜிதேந்திர தியாகியைக் கைது செய்கையில் எடுக்கப்பட்ட காணொளி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. அதில், கார் ஒன்றில் ஜிதேந்திர தியாகி மற்றும் யதி நரசிம்மானந்த் ஆகியோர் அமர்ந்திருக்க, ஜிதேந்திர தியாகியை வெளியே வர வேண்டும் என்றும் அவரை காவலில் எடுக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் கோருகின்றனர்.
ஹரித்வார் வெறுப்பு பேச்சு வழக்கு – விசாரணையில் பலரின் பெயர்கள் சேர்க்கப்படுமென காவல்துறை அறிவிப்பு
ஜிதேந்திர தியாகியை ஏன் கைது செய்ய வேண்டும் என்று யதி நரசிம்மானந்த் கேள்வி கேட்க, தர்ம சன்சத் நிகழ்ச்சியில் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை தூண்டிய வழக்கில் கைது செய்வதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இது தொடர்பான மூன்று வழக்கிலும் ஜிதேந்திர தியாகியுடன் நானும் உள்ளேன். இவர் மட்டும் தனியாகவா அவற்றை செய்தார்?” என்று யதி நரசிம்மானந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
காரின் கதவை திறந்து, ஜிதேந்திரவை கைது செய்ய விடுங்கள் என காவல்துறை பலமுறை கேட்டும், யதி நரசிம்மானந்த் மறுத்துள்ளதோடு, “நீங்கள் அனைவரும் செத்துப்போவீர்கள். உங்கள் குழந்தைகள் உட்பட..” என்று காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளதாக அக்காணொளியில் பதிவாகியுள்ளது.
பின்னர், ஜிதேந்திர தியாகி கைது செய்யப்பட்டதாக பிடிஐ செய்தி நிறுவனத்திடம் ஹரித்வார் மாவட்ட காவல்துறை கூறியுள்ளது.
உத்தரகண்ட் மாநில ஹரித்வாரில் நடந்த தர்ம சன்சத் நிக்ழச்சியில், சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறையைத் தூண்டிய விவகாரத்தில், யதி நரசிம்மானந்த், ஜிதேந்திர தியாகி, சத்வி அன்னப்பூர்னா உள்ளிட்ட பத்து பேர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Source: NDTV
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.