தமிழக பாஜகவின் ஓபிசி பிரிவு மாநில பொதுச் செயலாளர் சூர்யா சிவா என்பவர், பாஜக சிறுபான்மை அணித் தலைவி மருத்துவர் டெய்சி சரண் என்பவரை ஆபாசமாகப் பேசி, கொலை மிரட்டல் விடுக்கும் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பாஜக ஓபிசி பிரிவு மாநிலச் செயலாளர் சூர்யா சிவா, குற்றத்தை தெரிந்தே மறைத்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக உள்ள சே.வாஞ்சி நாதன் மதுரை காவல்நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து ஆபாச காணொளி – பாஜக பிரமுகர் கைது
மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக உள்ள சே.வாஞ்சி நாதன், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார். அவர் அளித்துள்ள புகார் மனுவில், “நேற்று சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில், பாரதீய ஜனதா கட்சியின் தமிழக ஓபிசி பிரிவு மாநில பொதுச் செயலாளர் திரு.சூர்யா சிவா என்பவர், பா ஜ க சிறுபான்மை அணித் தலைவி மருத்துவர் டெய்சி சரண் என்பவரை ஆபாசமாகப் பேசி, கொலை மிரட்டல் விடுக்கும் ஆடியோ வெளியானது.
அந்த ஆடியோவில், “சூர்யா சிவா அவர்கள், திருமதி.டெய்சி சரணை, சங்கை அறுத்து சம்பவம் செய்து விடுவேன், என் சாதிக்காரனை ஏவி விட்டு உன்னை கொன்று விடுவேன், நாங்க 68% இருக்கிறோம், என் சமுதாயம் மூலம் உன்னை ரோட்டில் இழுத்து வந்து ———— அய் அறுத்து விடுவேன், நீ ஊர் மேஞ்சுட்டு திரியிற, உன் புருசன் ஆஸ்பத்திரி நடத்த முடியாது, பு*** மவளே, உனக்கு ஆக்சிடென்ட் ஆகும், தெருவில் நாய் போல செத்துக் கிடப்ப, அதுக்கு நான்தான் பொறுப்பு, பு*** மவளே ஒரு மாசத்துல் உன்ன வெட்டி சாய்க்கிறேன், உன் ———அய் அறுத்து மெரினாவுல போடுறேன், செஞ்சு காட்டுறேன், நீ கேசவ விநாயகத்துட்ட படுத்துத்தான பதவி வாங்கின, அண்ணாமலை, ஜே.பி.நட்டா, மோடி, அமித்ஷா, யார்கிட்டயும் போ, இத ரிக்கார்டு பண்ணிக்க, ரிக்கார்டு பண்ணுறது கேசவ விநாயகத்தோட பழக்கம், நியூ இயர்க்குள்ள செஞ்சு காட்டுறேன்” என பகிரங்கமாக பேசியுள்ளார். மேற்படி ஆடியோவின் பிரதியை இப்புகாருடன் இணைத்துள்ளேன்.
பெண்களுக்காக போராட்டம் நடத்த பாஜகவினருக்கு தகுதி இல்லை – அமைச்சர் மனோ தங்கராஜ்
மேற்படி ஆடியோ வெளியான பின் ஊடகங்களில் பேட்டி அளித்த, பாஜக சிறுபான்மை அணி தலைவி மருத்துவர் டெய்சி சரண் அவர்கள், கடந்த 15 நாட்களுக்கு முன்பே, இந்த ஆபாச, சாதி வன்ம, கொலை மிரட்டல் ஆடியோ பேச்சிற்கு, பாஜக, மாநிலத் தலைவர் திரு.அண்ணாமலை அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, முறையீடு செய்ததாகவும், அதற்கு அண்ணாமலை அவர்கள், நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னதாகவும் தெரிவித்துள்ளார்.
மேற்கண்டவாறான சூர்யா சிவா அவர்களின் பேச்சு, இந்தியத் தண்டனை சட்டப் பிரிவுகள்.153-A, 294(b), 505(2), 506(i), 509 & Sec. 3,4 & 6 of THE INDECENT REPRESENTATION OF WOMEN(PROHIBITION) ACT,1986– Sec.4 of TN PROHIBITION OF HARASSENENT OF WOMEN ACT,1998- ன் கீழ் கடும் தண்டனைக்குரிய குற்றங்களாகும்.
ஓபிசி சமூகத்தை, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் மீது ஏவி விடுவேன் என்பது, சமூகத்தின் இரு பிரிவினரிடையே மோதலைத் தூண்டுவதுடன், பொது அமைதியை சீர்குலைக்க வன்முறையைத் தூண்டுவதாகும். சூர்யா சிவாவின் மேற்கண்டவாறான, பெண்களை மிகக் கேவலமாக இழிவுபடுத்தும், வன்முறையைத் தூண்டும், கொலை மிரட்டல் பேச்சு, தன்டனைக்குரிய குற்றம் என்று தெரிந்திருந்தும் கடந்த 15 நாட்களாக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், குற்றச் சம்பவத்திற்குப் புகார் கொடுக்காதது மற்றும் கொடுக்கச் சொல்லாதது, தெரிந்தே குற்றத்தை மறைக்கும், குற்றச் செயலாகும்.
இது பிரிவு 202 – Intentional omission to give information of offence by person bound to inform – Whoever knowing or having reason to believe that an offence has been committed, intentionally omits to give any information respecting that offence which he is legally bound to give, shall be punished with imprisonment of either description for aterm which may extend to six months, or with fine or both – என்கிறது. முன்னாள் காவல்துறை அதிகாரியான அண்ணாமலை அவர்களுக்குச் சட்டம் நன்கு தெரிந்திருந்தும், பிரிவு.202-ன் கீழ் குற்றம் இழைத்துள்ளார்.
பாஜக கட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.குறிப்பாக கே.டி.ராகவன் பிரச்சனை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா மீது பொது இடத்தில் நிகழ்ந்த பாலியல் வன்முறை மற்றும் தற்போது ஆடியோவில் சொல்லப்பட்ட, பாஜக அமைப்புச் செயலர் திரு.கேசவ விநாயகம், அவர்கள் பதவி கொடுப்பதற்காக, பாஜக சிறுபான்மை பிரிவு பெண்ணை பாலியல் ரீதியாக பயன்படுத்தினார், உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் கடும் குற்றங்கள் என்பதுடன், நாட்டில் சரிபாதி உள்ள பெண் சமூகத்திற்கு மட்டுமல்ல, சமூகத்திற்கே எதிரானது.பாஜக – மகளிர் அணியினரை, கட்சித் தலைமை நிர்வாகிகள், பதவி வழங்குவதற்காக பாலியல் ரீதியாக நிர்பந்தப்படுத்துகிறார்களா என்பதும் விசாரணைக்கு உரியது.
மேற்கண்ட குற்றங்கள் அனைத்தும் உடனடி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கான குற்றங்களாகும். மாண்புமிகு.உச்சநீதிமன்றம் “LALITA KUMARI –Vs- GOVERNMENT OF UTTAR PRADESH & OTHERS” reported in (2014) 2 SCC, வழக்கில்
“120.1. The registration of FIR is mandatory under section 154 of the Code, if the information discloses commission of a cognizable offence and no preliminary inquiry is permissible in such a situation.
120.3. If the inquiry discloses the commission of a cognizable offence, the FIR must be registered. In cases where preliminary inquiry ends in closing the complaint, a copy of the entry of such closure must be supplied to the first informant forthwith and not later than one week. If must disclose reasons in brief for closing the compliant and not proceeding further.
120.4. The police officer cannot avoid his duty of registering offence if cognizable offence is disclosed. Action must be taken against erring officers who do not register the FIR if information received by him discloses a cognizable offence.
120.5. The scope of preliminary inquiry is not to verify the veracity or otherwise of the information received but only to ascertain whether the information reveals any cognizable offence.”
மிகத் தெளிவாக சட்டநிலையை உறுதி செய்துள்ளது.
ஆகவே, அய்யா அவர்கள், மேற்கண்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட பாஜக ஓபிசி பிரிவு மாநிலச் செயலாளர் திரு.சூர்யா சிவா, குற்றத்தைத் தெரிந்தே மறைத்த பாஜக மாநில தலைவர் திரு.அண்ணாமலை ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக உள்ள சே.வாஞ்சி நாதன் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
பாஜக சங்கிகளின் ஆபாச அர்ச்சனை | எல்லாம் ஆட்டுக்குட்டி ட்ரெயினிங் போல | Aransei Roast | AnnamalaiBJP
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.