Aran Sei

யுவராஜ் சிங் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு – ஹரியானா காவல்துறை நடவடிக்கை

credits : the indian express

சாதிய ரீதியான வார்த்தையை பயன்படுத்தியதாக, இந்திய அணியின் முன்னாள் கிரிக்கேட் வீரர் யுவராஜ் சிங் மீது ஹரியானா காவல்துறை, வழக்கு பதிவு செய்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஜுன் மாதம் இந்திய கிரிக்கேட் வீரர் ரோகித் ஷர்மாவும், முன்னாள் கிரிக்கேட் வீரர் யுவராஜ் சிங்கும் இன்ஸ்டாகிராமில் நேரடி உரையாடலில் கலந்து கொண்டனர். அந்த உரையாடலில், யுவராஜ் சிங் இந்திய பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹாலையும், குல்தீப் யாதவையும் ”பாங்கி” (துப்புரவு பணியாளர்களை பாங்கி என அழைப்பர்) என்று குறிப்பிட்டார்.

யுவராஜ் சிங் இந்த வார்த்தையை பயன்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. ஹரியானாவைச் சேர்ந்த தலித் செயற்பாட்டாளர்கள் இதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்தனர்.

‘பெண்கள் இரவில் தனியாக வெளியே செல்லக் கூடாது’ – பாலியல் வன்கொடுமை குறித்து தேசிய மகளிர் ஆணையம் கருத்து

இதுதொடர்பாக, ஹரியானாவின், ஹிசார் மாவட்டத் சேர்ந்த தலித் செயற்பாட்டாளர் ராஜத் கல்சான், காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார். அந்தப் புகாரில், யுவராஜ் சிங்கின் பேச்சு, அந்த வீடியோவை நேரலையில் பார்த்துக் கொண்டிருந்த லட்சக்கணக்கான தலித் பார்வையாளர்களின் உணர்வை புண்படுத்தியுள்ளது எனவும் ஆகவே, அவரை கைது செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

கோயிலுக்குச் சென்றவரைப் பாலியல் வன்கொடுமை செய்த பூசாரி: தலைமறைவானவரை கைது செய்தது காவல்துறை

இந்நிலையில், நடந்த நிகழ்விற்கு மன்னிப்பு கோரியுள்ள யுவராஜ் சிங், மனிதர்களை எந்த வகையிலும் (சாதி, நிறம், பாலினம்) பிரித்துப் பார்க்கவில்லை எனவும், தன்னுடைய வாழ்வை, மக்களின் முன்னேற்றத்திற்காக அர்பணித்திருக்கேன் எனவும் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு தனி மனிதரையும் கண்ணியத்துடன் நடத்துவதாக கூறியுள்ள யுவராஜ் சிங், ”நான் என் நண்பர்களுடன் உரையாடியபோது பயன்படுத்திய வார்த்தை தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டுள்ளது. எனினும், நான் யாருடைய உணர்வுகளையாவது புண்படுத்தியிருந்தால், அதற்காக வருந்துகிறேன்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை : ‘போராட்டத்தைத் தடுக்கும் சர்வாதிகார ஆட்சி’ – ஸ்டாலின் கண்டனம்

இந்நிலையில், ஹரியானா காவல்துறை, கடந்த ஆண்டு ஜுன் மாதம் ராஜத் கல்சான் அளித்த புகாரின் அடிப்படையில், யுவராஜ் சிங் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 153, 153 ஏ, 295, 505 மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும், முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

யுவராஜ் சிங் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு – ஹரியானா காவல்துறை நடவடிக்கை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்