Aran Sei

’சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டும் பதிவுகள்’ – சசி தரூர் உட்பட மூத்த பத்திரிக்கையாளர்கள் மீது வழக்கு

மூக வலைதள பதிவுகள் வழியாக டெல்லி விவசாயிகளின் போராட்டத்தில் வன்முறையைத் தூண்டியதாகக் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர், மூத்த பத்திரிகையாளர்கள் ராஜ்தீப் சர்தேசாய், மிருனல் பாண்டே, ஜாபர் ஆகா, அனந்த் நாத், பரேஷ் நாத், வினோத் கே.ஜோஸ் ஆகியோர் மீது கௌதம் புத்தா நகர் மாவட்ட காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

உத்தரபிரதேசம் மாநிலம் கௌதம் புத்தா நகர் மாவட்டத்தில் உள்ள நொய்டா  காவல் நிலையத்தில், 153 ஏ (வேறுவேறு குழுக்களுக்கு இடையே பகைமையை ஊக்குவித்தல்), 153 பி, 295 ஏ (மத உணர்வுகளைச் சீர்குலைக்கும் செயல்கள்), 298 (மத உணர்வுகளைக் காயப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்துடன் செயல்படுதல்), 504, 506, 124 ஏ, 120 பி (குற்றவியல் சதி) மற்றும் தகவல் தொழிற்நுட்ப சட்டம், 2000-ன் பிரிவு 66 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

‘கைதுகள், பொய் வழக்குகள்; தமிழக விவசாயிகளை பழிவாங்கும் தமிழக அரசு’ – கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

புகார் அளித்த அர்பிட் மிஸ்ரா என்பவர் சசி தரூர் மற்றும் மூத்த பத்திரிகையாளர்கள் தவறான ட்வீட்களை பதிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். அந்தப் புகாரில், “ஒரு போராட்டக்காரரைக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றதாக அவர்கள் கூறியுள்ளனர். டெல்லியில் பெரிய அளவிலான கலவரம் ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்துடனேயே அவர்கள் இது போன்ற சூழ்நிலையை உருவாக்குகிறார்கள். தங்களது ட்வீட் வழியாக நாட்டையும் மக்களின் பாதுகாப்பையும் ஆபத்தில் சிக்க வைக்கிறார்கள்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “குற்றம் சாட்டப்பட்டவர்கள் பல்வேறு சமூகங்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டே ட்வீட் செய்துள்ளனர். தங்களின் அரசியல் நலனுக்காக வன்முறையில் ஈடுபட போராட்டக்காரர்களைத் தூண்டியுள்ளனர் பலரால் பகிரப்பட்ட இந்த ட்வீட்டுகளை சமூக வலைதளங்களிலிருந்து உடனே  நீக்க வேண்டும்.” என்று அர்பிட் மிஸ்ரா புகாரில் வலியுறுத்தியுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

‘வன்முறையைத் தூண்டிய பாஜக; டெல்லியில் ரத்தம் சிந்திய விவசாயிகள், காவலர்கள்’ – சிவசேனா குற்றச்சாட்டு

குடியரசு தினத்தன்று காவல்துறையை பற்றி அவதூறு பரப்பியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு, அப்பிரிவின் கீழும் இவர்கள்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

’சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டும் பதிவுகள்’ – சசி தரூர் உட்பட மூத்த பத்திரிக்கையாளர்கள் மீது வழக்கு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்