Aran Sei

உன்னாவ் சிறுமிகள் கொலை – செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் பர்கா தத் மீது வழக்கு

உன்னாவ் சிறுமிகள் கொலை தொடர்பாக செய்தி வெளியிட்ட தி மொஜோ ஸ்டொரி என்ற ஊடகத்தின் மீது, உத்தர பிரதேச காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி,  உத்திரபிரதேசத்தின், உன்னாவ் மாவட்டத்தில், இரண்டு தலித் சிறுமிகள் சடலமாகவும், ஒரு சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையிலும், கண்டுபிடிக்கப்பட்டனர்.

கால்நடைகளுக்குத் தீவனம் சேகரிக்க சென்ற சிறுமிகள் வீட்டிற்கு திரும்பாத நிலையில், கிராமவாசிகள் தேடியபோது, வயல்வெளியில் சிறுமிகளை கண்டதாக,  உள்ளுர்வாசிகள் தெரிவித்தனர்.

ஹத்ராஸ் – நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை : உச்சநீதி மன்றம் உத்தரவு

சிறுமியின் சகோதரர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “இன்று, அவர்கள் புல் சேகரிக்க வயலுக்கு சென்றிருந்தார்கள். திரும்பி வர தாமதமானதால், நாங்கள் அவர்களைத் தேடிச் சென்றோம். அங்கே அவர்கள் ஆடைகளால் கை, கால்கள் கட்டப்பட்டு நிலையில் கிடந்தார்கள்.” என்று கூறியிருந்தார்.

முன் அனுமதியுடன் கோவிலில் தொழுகை செய்தவர் கைது – உத்தர பிரதேச காவல்துறை நடவடிக்கை

இந்த வழக்கை விசாரித்து வரும் காவல்துறை, உயிரிழந்த இரு சிறுமிகளும் வலுக்கட்டாயமாக விஷம் ஊற்றிக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், சிறுமிகள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில், அவர்கள் மறுப்பு தெரிவித்து போராடியதற்கான அறிகுறிகளோ, சிறுமிகளின் உடல்களில் காயங்களோ இல்லை என்றும் தெரிவித்தது.

`பசுக்களுக்குத் தனி அமைச்சகம் அமைக்கப்படும்’ – மத்தியப் பிரதேசம்

தொடர்  விசாரணையில், ஒரு தலைக் காதலால் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளதாக தெரிவித்த காவல்துறை, இதுதொடர்பாக இருவரை கைது செய்தது. அந்த பெண்களுக்கு பூச்சு மருந்தை தண்ணீரில் கலந்து கொடுத்து சிறுமிகள் கொலை செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

நடைமுறையில் இல்லாத 66ஏ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு – உத்தரப்பிரதேச அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்

இந்நிலையில், இந்த சம்பவத்தைப் பற்றி செய்தி வெளியிட்ட தி மோஜோ ஸ்டொரி, மற்றும் இந்த சம்பவம் தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்த 7 பேர் மீது, உத்தர பிரதேச காவல்துறை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது.

உத்தர பிரதேசத்தின் திருமண சட்டம் – வெறுப்பை சட்டமாக்கும் இருண்ட நடவடிக்கை

அந்த பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக கருத்துக்களை பகிர்ந்துள்ள ட்விட்டர் கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக, காவல்துறையினர் தெரிவித்துள்ளதாக தி நியூஸ் மினிட் செய்தி வெளியிட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் : திருமணத்திற்காக மதமாற்றத் தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்

பெண்களின் குடும்ப உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அந்தச் சிறுமிகளின் இறுதிச் சடங்குகளை காவல்துறை அவசரமாக நிறைவேற்றியது எனும் போலிச் செய்தியை,  தி மோஜோ ஸ்டோரி வெளியிட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆனால், சிறுமிகளின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்த கருத்தையே செய்தியாக்கியுள்ளதாக தி மோஜோ ஸ்டோரி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது

இது தொடர்பாக, தி மோஜோ ஸ்டோரி இணைய இதழின் ஆசிரியரிரும், அறியப்பட்ட பத்திரிகையாளரான பர்கா தத், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “உன்னாவ் கொலைகளில், பத்திரிகை தர்மத்தை மீறாமல் ஒரு செய்தியின் அனைத்து தரப்பையும் வெளிக்கொண்டு வந்ததற்காக, எங்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறைத்தண்டனை விதிக்கப்படும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருப்பது அப்பட்டமான மிரட்டல் ஆகும். நான் இதை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிடுவேன்” என பதிவிட்டுள்ளார்.

மதமாற்ற தடைச் சட்டத்தால் 17 வயது சிறுவன் கைது: அரசியலமைப்பை மீறுகிறதா உத்தர பிரதேசம்?

”உத்தர பிரதேச காவல்துறை முதல் தகவல் அறிக்கை நகலை தர மறுக்கிறது, இதன் மூலம் எனது அடிப்படை சட்ட உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கை நகல் இல்லாமல் என்னால் நீதிமன்றத்தை நாட முடியாது. இது உச்சகட்ட துன்புறுத்தல்” எனவும் பர்கா தத் ட்வீட் செய்துள்ளார்.

உத்தர பிரதேசம் : இந்து முஸ்லிம் திருமணத்தைப் பதிவு செய்ய விடாமல் தடுத்த பஜ்ரங் தளம்

எங்களுக்கு எதிரான முதல் தகவல் அறிக்கையில், பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்கள் என நாங்கள் குறிப்பிட்டுள்ளதாக  காவல்துறை கூறுகிறது. நாங்கள் அவ்வாறு செய்தி வெளியிடவில்லை எனவும் பர்கா தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசம் உன்னாவில் மீண்டும் பயங்கரம் – 2 தலித் சிறுமிகள் சடலமாக மீட்பு; ஒருவர் கவலைக்கிடம்

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராசில், 19 வயது தாழ்த்தப்பட்ட பெண், கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின்னர் உயிரிழந்த சம்பவத்தை செய்தி சேகரிக்கச் சென்ற மலையாள பத்திரிகையாளர் சித்திக் காப்பான் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உன்னாவ்  சிறுமிகள் கொலை – செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் பர்கா தத் மீது வழக்கு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்