ஹலால் சான்றளிக்கப்பட்ட பொருட்களுக்கு நாடு முழுவதும் தடை விதிக்க வேண்டும், ஹலால் சான்றிதழை திரும்ப பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் 85 விழுக்காடு மக்கள் சார்பாக இந்த மனுவை தாக்கல் செய்திருப்பதாக மனுவை தாக்கல் செய்த வழக்கறிஞர் விபோர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
“மக்கள் தொகையில் 15 விழுக்காடு மட்டுமே உள்ள சிறுபான்மை இஸ்லாமியர்கள், ‘ஹலால்’ உணவு உட்கொள்ள விரும்புவதால், மீதிமுள்ள 85 விழுக்காட்டினர் மீது அது கட்டாயப்படுத்தப்படுகிறது. இது இந்திய அரசியலமைப்பு 14 மற்றும் 21 பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாகும்.” என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1974 ஆண்டு இந்தியாவில் ஹலால் சான்றிதழ் அளிக்கும் நடைமுறை தொடங்கியது. இது ஆரம்பத்தில் இறைச்சி பொருட்களுக்கு என்று இருந்த நிலையில், தற்போது மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள், சுகாதார பொருட்கள், கழிப்பறைகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் உள்ளிட்ட பிற பொருட்களுக்கும் விரிவடைந்து விட்டது. இது தளவாடங்கள், ஊடகங்கள், வர்த்தகம் மற்றும் சந்தைப்படுத்தல் போன்ற சேவைகளிலும் கூட ஊடுருவி வருகிறது” என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாடு முழுவதும் உள்ள சந்தைகளில் இருந்து அனைத்து ஹலால் சான்றளிக்கப்பட்ட உணவுகள் மற்றும் பிற நுகர்வுப் பொருட்களை திரும்பப் பெறுவதற்கு கேஎஃப்சி, நெஸ்லே, பிரிட்டானியா போன்ற பதிலளித்த நிறுவனங்களுக்கும் இந்தியாவில் செயல்படும் அனைத்து உள்ளூர் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் உத்தரவிடுமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.
‘ஹலால் முறையில் விலங்குகளை கொல்ல தடை விதிக்க முடியாது’ – உச்சநீதி மன்றம்
இஸ்லாமியர் அல்லாத ஒருவர் ஹலால் சான்றளிக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
“இந்தியாவில் இந்த நடைமுறை தொடர்ந்தால், உற்பத்தியாளர்கள் மூன்று விதமான பொருட்களைத் தயாரிக்க நிர்பந்திக்கப் படுவார்கள். 85 விழுக்காடு இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு உகந்தது, 15 விழுக்காடு இஸ்லாமியர்களுக்கு உகந்தது, 100 விழுக்காடு நுகர்வோருக்கு உகந்தது. வெளிப்படையாக உற்பத்தியாளர் அதிக லாபம் தரக்கூடிய முறைய தான் உற்பத்தியாளர் தேர்ந்தெடுப்பார்.” என்று மனுதாரர் கூறியுள்ளார்.
ஹலால் இறைச்சி விற்பனை என்பது ‘பொருளாதார ஜிகாத்’ – பாஜக தேசியப் பொதுச்செயலாளர் சர்ச்சை கருத்து
ஹலால் சான்றிதழைப் பொறுத்த வரை, இறுதி நுகர்வோர் தான் முடிவெடுப்பவராக இருக்க வேண்டும். இஸ்லாமியர் அல்லாத நுகர்வோர் ஹலால் சான்றிதழால் ஏமாற்றப்பட்டதாகவோ அல்லது காயப்பட்டதாகவோ உணர்ந்த்தால் அவருக்கு ஹலால் அல்லாத பொருட்களை வாங்குவதற்கான விருப்பம் வழங்கப்பட வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
பாலிவுட் திரைப்படக் கலைஞர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பிய குற்றசாட்டில் 2020ல் மும்பை காவல்துறையினரால் விபோர் ஆனந்த் கைது செய்யப்பட்டார். ரிப்ளிக் தொலைக்காட்சியைப் பார்த்து அந்தத் தகவல்களைத் தெரிந்து கொண்டதாகவும், அதற்காக மன்னிப்பு கோரிவதாகவும் தெரிவித்ததை அடுத்து அவருக்கு நிபந்தனையின் அடிப்படையில் பிணை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Live Law
கொடநாடு மர்மம் அவிழப்போகும் உண்மைகள் – ரேஸ்கோர்ஸ் ரகுநாத் நேர்காணல்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.