ராணுவத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்க்கும் ‘அக்னிபத்’ திட்டத்திற்கு எதிராக அமைதியான வழியில் போராடுங்கள் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்குக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒன்றிய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் வன்முறை ஏற்பட்டுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களுக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், ஆயுத படைகளுக்கு ஆட்சேர்க்கும் புதிய கொள்கையை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இது துரதிருஷ்டவசமானது. இது முற்றிலும் செல்லும் திசையின்றி உள்ளது. இளைஞர்களின் குரலைப் புறக்கணிப்பதாக உள்ளது. முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்பு நிபுணர்கள் பலர் இத்திட்டம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். அக்னி பாதை திட்டத்துக்கு எதிராக போராடும் இளைஞர்களுக்குக் காங்கிரஸ் துணை நிற்கும். இளைஞர்களின் நலனைக் காக்கவும் இந்த திட்டத்தை வாபஸ் பெறச் செய்யவும் போராடும் எனஉறுதி அளிக்கிறேன். உண்மையான தேசபக்தர்களாக சத்தியம், அகிம்சை மற்றும் அமைதி வழியில் உங்கள் குரலை நாங்கள் வெளிப்படுத்துவோம்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், உங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக அமைதியான மற்றும் வன்முறையற்ற வழியில் போராட்டம் நடத்துமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன். காங்கிஸ் கட்சி உங்களுக்குத் துணையாக இருக்கிறது. என்று சோனியா காந்தி அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
Source: The Hindutamil
அக்னிபத் திட்டம் எதிரொலி பற்றி எரியும் பாஜக அலுவலகம் Piyush Manush | Agnipath Indian Army | Agnipath
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.