Aran Sei

இலவசமாக நாப்கின் வழங்க வேண்டும் என்று கேட்ட மாணவியிடம் ஆணுறையும் கேட்பீர்களா என்று கூறிய பெண் மாவட்ட ஆட்சியர் – வலுக்கும் கண்டனங்கள்

பீகார் மாநிலத்தில், சானிடரி நாப்கின்களை இலவசமாக வழங்குமாறு கேட்ட ஒரு பள்ளி மாணவியின் கோரிக்கைக்கு ஆணுறையை கூட அரசிடமிருந்து எதிர்பார்பார்ப்பீர்களா? என்று பெண் மாவட்ட ஆட்சியர் அளித்த பதில் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் யுனிசெஃப் அமைப்புடன் சேர்ந்து நடத்தப்பட்ட ஒரு பயிற்சிப் பட்டறையில், கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் ஹர்ஜோத் கவுர் அவர்களிடம் மாணவி ரியா குமார் 20, 30 ரூபாயில் கிடைக்கும் சானிட்டரி நாப்கின்களை அரசு இலவசமாக அளிக்குமா என்று கேள்வி கேட்டிருக்கிறார்.

அதற்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சியர், இலவச ஆடைகள், காலணிகள் என இன்னும் ஆணுறையை கூட அரசிடமிருந்து எதிர்பார்பார்ப்பீர்கள் என்று கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

திருமணமான, திருமணமாகாத பெண்கள் உட்பட அனைத்து பெண்களுக்கும் கருக்கலைப்பு செய்ய சட்டப்பூர்வ உரிமை உண்டு – உச்சநீதிமன்றம்

மேலும், தமது பள்ளியில் உடைந்துபோன கழிவறைகள் இருப்பதும், அதனை பயன்படுத்துவதில் இருக்கும் சிரமங்கள் பற்றியும் மாணவிகள் பேசினர். அங்கு கூடியிருந்தவர்கள் பெரும்பாலும் 15, 16 வயதுடைய மாணவிகள்.

அம்மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் மூத்த அதிகாரியாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு கழகத்தின் தலைவராகவும் இருக்கிறார் ஹர்ஜோத் கவுர். அந்த பள்ளி மாணவியின் கேள்வி, அவரை எரிச்சலடைய வைத்தது.

“நீங்கள் ஏன் எல்லாவற்றையும் அரசிடம் இருந்து பெற நினைக்கிறீர்கள்? இந்த சிந்தனை முறையை மாற்ற வேண்டும். அதை நீங்களே செய்யுங்கள்,” என்று அவர் கூறினார்.

சட்டம் – ஒழுங்கு பிரச்சினை காரணமாக ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுப்பு – தமிழ்நாடு காவல்துறை

குடிமக்களால் வாக்களிக்கப்பட்ட அரசிடமிருந்து தீர்வு கேட்பதாக கூறிய அந்த மாணவியிடம் கோபமாக பேசிய ஹர்ஜோத் கவுர், “இது முட்டாள்தனத்தின் உச்சம். அப்படியெனில் வாக்களிக்காதீர்கள். பாகிஸ்தானியர்களாக ஆகி விடுங்கள். நீங்கள் பணத்திற்காகவும் சேவைகளுக்காகவும் வாக்களிக்கிறீர்களா?” என்று மறுகேள்வி எழுப்பினார்.

இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்ட பிறகு, பலர் அவரது கருத்துகளை ‘வெட்கக்கேடானது’ என்று அழைத்தனர். மேலும் அந்த அதிகாரி ஒரு பொதுத்துறை ஊழியராக இருக்க ‘தகுதியற்றவர்’ என்று கூறினார்.

இந்த நிலையில் ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்த மாணவி ரியா குமார் ஊடகங்களிடம் பேசிய பொழுது, “என்னுடைய கேள்வியில் எந்த தவறும் இல்லை. இது பெரிய விஷயம் இல்லை. என்னால் சானிட்டரி நாப்கின் வாங்க முடியும். ஆனால் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ள மாணவிகளால் வாங்க முடியாது. அவர்கள் சார்பாகத்தான் இந்த கோரிக்கையை வைத்தேன்” என்று தெரிவித்தார்.

தமிழ்நாடு: ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்த காவல்துறை

இவ்விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதால், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். இந்த சூழலில் தன்னுடைய கருத்து பெண்களை புண்படுத்தி இருந்தால் மன்னிகவும் என்று ஐஏஎஸ் அதிகாரி ஹர்ஜோத் கவுர் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து இந்த விவகாரத்தில் விசாரணையை தொடங்கியுள்ளது. 7 நட்களுக்குள் அவரிடமிருந்து உரிய விளக்கம் கேட்டுள்ளது.

தேசிய குடும்ப சுகாதார திட்ட கணக்கெடுப்பின்படி, பீகார் மாநிலத்தில் மாதவிடாய் காலத்தில் சுகாதாரமான வழிமுறைகளை 59% பெண்கள் மட்டுமே கடைப்பிடிக்கிறார்கள். இந்த கணக்கெடுப்பு, சுகாதார மற்றும் சமூக அடிப்படையில் நடத்தப்படும் அரசின் ஆய்வு.

Source : NDTV

RSS பேரணிக்கு ஆப்பு வைத்த திருமா | எனக்குன்னே வருவீங்களானு கதறும் RSS | Aransei Roast | BJP | VCK

இலவசமாக நாப்கின் வழங்க வேண்டும் என்று கேட்ட மாணவியிடம் ஆணுறையும் கேட்பீர்களா என்று கூறிய பெண் மாவட்ட ஆட்சியர் – வலுக்கும் கண்டனங்கள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்