Aran Sei

கருப்பு மை வீசியோ, கொடிய தாக்குதல் நடத்தியோ விவசாயிகளின் குரல்களை நசுக்க முடியாது – விவசாய சங்க தலைவர் ராகேஷ் தியாகத்

ருப்பு மையினாலும் கொடிய தாக்குதலாலும் விவசாயிகள், தொழிலாளர்கள், தலித்துகள், பழங்குடிகள், சுரண்டப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்களின் குரல்களை நசுக்க முடியாது. கடைசி மூச்சு வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று பாரதிய கிசான் யூனியனின் செய்தி தொடர்பாளர் ராகேஷ் தியாகத் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் பாரதிய கிசான் யூனியன் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ராகேஷ் தியாகத் மீது கருப்பு மாய் வீசப்பட்டது பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இது தொடர்பாக காவல்துறை இதுவரை 3 பேரைக் கைது செய்துள்ளனர்.

விவசாய தலைவர் ராகேஷ் திகாயத் மீது மை வீச்சு: விவசாயிகளுக்கு எதிரான பாஜகவின் முகம் வெளிப்பட்டுள்ளதாக சம்யுக்தா கிசான் மோர்ச்சா கண்டனம்

இந்த விவகாரத்தில் அலட்சியமாக இருந்த காவல்துறை அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள சம்யுக்தா கிசான் மோர்ச்சா, ராகேஷ் தியாகத்திற்கு கர்நாடக அரசு எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் இந்த சம்பவம் பாஜகவின் தூண்டுதலால் தான் நடந்தேறியுள்ளது என்று சம்யுக்தா கிசான் மோர்ச்சா குற்றம் சாட்டியுள்ளது.

கர்நாடகா: பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் மீது மை வீச்சு – பாஜக அரசு பாதுகாப்பு வழங்கவில்லை என்று குற்றச்சாட்டு

பெங்களூரின் உள்ளூர் விவசாயத் தலைவரான கொடிஹள்ளி சந்திரசேகர் என்பவர் பேருந்து ஓட்டுநர் நடத்துநர்களின் வேலைநிறுத்த போராட்டத்தைக் கைவிட பணம் கேட்டதாக கர்நாடக மாநில செய்தி தொலைக்காட்சி அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது. அதில் ராகேஷ் தியாகத் உட்பட பல விவசாய சங்க தலைவர்களின் பெயர்களை கொடிஹள்ளி சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் பெங்களூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது, “கொடிஹள்ளி சந்திரசேகர் எங்கள் பெயர்களைப் பயன்படுத்துகிறார், அவர் ஒரு மோசடிக்காரர்” என்று ராகேஷ் தியாகத் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த கொடிஹள்ளி சந்திரசேகரின் ஆதரவாளர்கள் ராகேஷ் தியாகத் மீது மை வீசியதாக கூறப்படுகிறது.

Source : The New Indian Express

தமிழ்நாட்டை குறிவைக்கும் அண்ணா ஹசாரேக்கள் I Maruthaiyan Interview

கருப்பு மை வீசியோ, கொடிய தாக்குதல் நடத்தியோ விவசாயிகளின் குரல்களை நசுக்க முடியாது – விவசாய சங்க தலைவர் ராகேஷ் தியாகத்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்