குடியரசு தினத்தன்று, டிராக்டர் பேரணி நடத்துவதற்கான தயாரிப்பில் பஞ்சாப் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுவருவதாக தி இந்து செய்தி தெரிவிக்கிறது.
இதுகுறித்து தி இந்து -விடம் பேசியுள்ள, பாரத் கிசான் சங்கத்தின், ஜலந்தர் மாவட்ட தலைவர் அம்ரீக் சிங், ”கிராமங்களில் உள்ள தன்னார்வலர்களால், டிராக்டர் மற்றும் மோட்டர் பைக் பேரணிகள் தினந்தோறும் நடத்தப்படுகின்றன. அவர்கள் ஒவ்வொரு மூலை முடுக்குகளுக்கும் சென்று, தற்போது வரை வீடுகளில் உள்ளவர்களையும், வரும் 26ஆம் தேதி, டெல்லி நோக்கி புறப்படுங்கள் என்று கோரி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார்.
’விவசாயிகளின் குடியரசு தின டிராக்டர் பேரணிக்குத் தடை விதிக்க முடியாது’ – உச்ச நீதிமன்றம் உத்தரவு
கிராமத்தில் உள்ள பெண்கள், ஒவ்வொரு வீட்டுக் கதவையும் தட்டி, ஆதரவு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
“ஒரு டிராலியில், இரண்டு டிராக்டர்களை ஏற்றிக்கொண்டு செல்கிறோம். இதன் மூலம் டிராக்டர்களின் எண்ணிக்கை அதிகமாவதுடன், எரிபொருள் செலவும் குறைகிறது” என்று அம்ரீக் சிங் கூறியுள்ளார்.
பஞ்சாபிலிருந்து டெல்லி செல்வதற்கு 12 ஆயிரம் ரூபாய் எரிபொருளுக்கு செலவிட வேண்டும் என்று கூறியுள்ள அம்ரீக் சிங், இரண்டு டிராக்டர்களை ஒரே டிராலியில் ஏற்றிச் செல்வதால், சுமார் 25 ஆயிரம் ரூபாயை மிச்சப்படுத்த முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
“நாங்கள் 10 டிராக்டர்களை ஏற்றிச் செல்லும் டிராலிகளையும் வாடகைக்கு எடுத்துள்ளோம். அவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வாடகை கொடுப்போம். இருந்தபோதும், 70 ஆயிரத்தை சேமிக்க முடியும்” என்று அம்ரீக் சிங் தி இந்து-விடம் தெரிவித்துள்ளார்.
கீர்த்தி கிசான் சங்கத்தின் உறுப்பினர் சந்தோக் சிங், சிங்கு எல்லையிலிருந்து டெல்லி நோக்கி, டிராக்டர்கள் மட்டுமே பேரணியாக செல்லும் என்று தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.