Aran Sei

‘விவசாயிகளின் போராட்டம் இன்னும் முடிவடையவில்லை’: ஒன்றிய அரசுக்கு மேகாலயா ஆளுநர் எச்சரிக்கை

விவசாயிகளின் போராட்டம் இன்னும் முடிவடையவில்லை. தர்ணா தான் முடிவுக்கு வந்துள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்த சட்டத்தைக் கொண்டு வராவிட்டால் ஒன்றிய அரசுக்கு எதிராக “கடுமையான போராட்டத்தை” விவசாயிகளை நடத்துவார்கள் என்று மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் எச்சரித்துள்ளார்.

ஜெய்ப்பூரில் நடந்த ஜாட் சமூக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சத்யபால் மாலிக், மேகாலயா ஆளுநராக தனது பதவிக் காலம் முடிந்தவுடன் தானும் இந்த இயக்கத்தில் இணைவேன் என்று உறுதிமொழி கொடுத்தார்.

விவசாயிகள் நலனுக்கு குரல் கொடுப்பதால் பதவி பறிக்கப்படுமோ என்ற பயம் எனக்கில்லை – மேகாலயா ஆளுநர்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடிக் கொண்டிருந்தபோது, நான் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, விவசாயிகளுக்கு எதிராக அட்டூழியங்கள் நடத்தப்படுவதாக அவரிடம் கூறினேன் என்று சத்யபால் மாலிக் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தை விவசாயிகளுடன் பேசி தீர்க்க வேண்டும் என்று பிரதமரிடம் நான் பரிந்துரைத்தேன். ஆனால் அவர்கள் தாங்களாகவே தர்ணாவை முடித்துக்கொள்வார்கள் என்று மோடி தன்னிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு அநீதி விளைவித்தால் மீண்டும் போராட்டம் தொடரும் – ஒன்றிய அரசை எச்சரித்த மேகாலயா ஆளுநர்

சாமானிய மக்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டு வரும் நேரத்தில் ஒருசிலர் மட்டும் எவ்வாறு பெரும் பணக்காரர்களாகி வருகிறார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு சத்யபால் மாலிக் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை ஒன்றிய அரசு இன்னமும் நிறைவேற்றவில்லை என்று கடந்த மாதம் சத்யபால் மாலிக் தெரிவித்திருந்தார்.

விவசாயிகள் மீதான் தடியடி நடத்திய விவகாரம்; ஹரியானா முதல்வர் மன்னிப்பு கோர வேண்டும் – மேகாலயா ஆளுநர் வலியுறுத்தல்

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் போது விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுதல், குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்ட உத்தரவாதம் மற்றும் போராட்டத்தின் போது இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு ஆகியவை போராட்டக்காரர்களின் கோரிக்கைகளில் சிலவாகும், அவை அவர்கள் தர்ணாவை முடிப்பதற்கு முன்பு அரசாங்கம் பரிசீலிக்க ஒப்புக்கொண்ட சில கோரிக்கைகளாகும்.

கடந்த ஜனவரி மாதம், விவசாயிகள் பிரச்சினை குறித்து பிரதமர் மோடியை சந்தித்து பேசியா பின்பு, மோடி ‘திமிர் பிடித்தவர்’ என்று பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Source : the hindu

Bulldozer இருக்க நீதிமன்றம் எதற்கு? | உ.பி.,-இல் பாஜக வெறியாட்டம் | Yogi Adityanath

‘விவசாயிகளின் போராட்டம் இன்னும் முடிவடையவில்லை’: ஒன்றிய அரசுக்கு மேகாலயா ஆளுநர் எச்சரிக்கை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்