நாட்டில் அதிகரித்துவரும் வேலைவாய்ப்பின்மையை கண்டித்து மஹாபஞ்சாயத்து என்ற பெயரில் விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ள நிலையில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஒன்றிய அரசின் அமைச்சர் அஜய் மிஸ்ரா மற்றும் அவரது மகன் ஆசிஷ் மிஸ்ராவை எதிர்த்து உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் வவசாயிகள் அண்மையில் போராட்டங்கள் நடத்தியிருந்தனர்.
‘விவசாய சங்கத்தை உடைப்பதற்காக பாஜக என்னைக் கொல்ல முயற்சிக்கிறது’ – ராகேஷ் தியாகத் குற்றச்சாட்டு
இதனைத் தொடர்ந்து சம்யுக்த கிசான் மோர்சா சார்பில் மஹாபஞ்சாயத்து போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் குறிப்பாக மாநில எல்லைகளில் காவல்துறையினர் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.
முன்னதாக விவசாயிகளின் தலைவர் ராகேஷ் தியாகத் தடுப்புக் காவலில் எடுக்கப்பட்டார். பின்னர் அவர் டெல்லிக்குள் நுழையமாட்டேன் என்று தெரிவித்ததை அடுத்து விடுவிக்கப்பட்டார்.
டெல்லி, ஹரியானா இடையேயான சிங்கு எல்லையில் காவல்துறையினரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தடுப்புக்காவலில் எடுக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், டெல்லி ஹரியானா, டெல்லி உத்தரப் பிரதேச மாநிலங்களை இணைக்கும் சாலைகளில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
காசியாபூர் எல்லையில் என்னை தடுத்து நிறுத்தி திரும்பிச் செல்லச் செய்தனர். இதுபோன்ற தடுப்புக் காவல்களால் எங்கள் போராட்டத்தை ஒடுக்க முடியாது நாங்கள் எங்கள் இறுதி மூச்சுவரை போராடுவோம். ஒருபோதும் சோர்ந்துவிட மாட்டோம் என்று என்று விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் தியாகத் தெரிவித்துள்ளார்.
Source : india today
மூஞ்சிய பாத்தே சாதிய கண்டுபிடிப்பேன் | பேராசிரியர் அனுராதாவின் அதிசய திறமை | Aransei Roast | Periyar
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.