பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தில் பல்வேறு விவசாயச் சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி சாலைகளை முடக்கி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திருமப் பெறக்கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடும் பகுதிகளில் இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டதை கண்டித்து மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் தர்ணா போராட்டம் நடத்த கோரி விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி அழைப்பு விடுத்தது. இந்தத் தர்ணா போராட்டத்தின்போது ஆம்பூலன்ஸ் மற்றும் பள்ளி பேருந்துகளுக்கு மட்டுமே வழிவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
விவசாயிகள் போராட்டம் – களமிறங்கிய சுற்றுச்சூழலாளர்கள் – உலக அரங்கில் கவனம் அதிகரிப்பு
அந்த அழைப்பின் பேரில், இன்று நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணிவரை மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் தர்ணா போராட்டம் நடத்தப்படும் எனவும் விவசாயிகளின் ஒற்றுமையை வெளிப்படுத்த மதியம் 3 மணியளவில் விவசாயிகள் வாகனத்திலிருந்து ஒலியெழுப்ப வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
விவசாயிகள் போராட்டம் – 80 வயதான சிறு விவசாயி, முன்னாள் இராணுவ வீரரை கைது செய்த டெல்லி போலீஸ்
இந்நிலையில், இன்று, நூற்றுக்கணக்கான விவசாயிகள், பல்வேறு பகுதிகளில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை முடக்கி தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தின் எல்லையில் இருக்கும் ஷம்பு பகுதியில் இளைஞர்களும் வயது முதிர்ந்ததவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.
விவசாயிகள் போராட்டம் – மும்பையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கும் கிளர்ச்சி
விவசாயிகளுக்கு விரோதமாக இந்தச் சட்டங்கள் இருப்பதால், இதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனப் போராட்டக்காரர் ஒருவர் கூறியதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
பாரதி கிசான் சங்கத்தின் பொதுச் செயலாளர் சுக்தேவ் சிங், 15 மாவட்டங்களில் உள்ள 33 இடங்களில் சாலைகள் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் என தி இந்துவில் வெளி வந்த செய்தி கூறுகிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.