குடியரசு தினத்தன்று அரசு நடத்தும் ராணுவ அணிவகுப்பிற்கு இணையாக டிராக்டர் அணிவகுப்பு நடத்தப்படும் என்று போராடும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த, கிராந்திகாரி கிசான் சங்கத்தின் தலைவர் தர்ஷன் பால் “அனைத்து விவசாயிகளையும் டிராக்டரில் டெல்லியை நோக்கி வரும்படி கேட்டுக்கொள்வோம். குடியரசு தினத்தன்று நடைபெறும் டிராக்டர் அணிவகுப்பிற்கான ஆடை ஒத்திகை, ஜனவரி 6 ஆம் தேதி குண்டில், மனேசர், பல்வா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் நடைபெறும். ஜனவரி 4 ஆம் தேதி அரசுடன் நடத்தும் பேச்சுவார்த்தையின் போதும், ஜனவரி 5 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போதும் எங்கள் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் இது நடக்கும்” என்று கூறியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
பிரதமரை நம்பாத விவசாயிகள் – நரேந்திர மோடியின் வாய்வீச்சு வீரியம் இழக்கிறதா?
ஜனவரி 26 வரை இதுவே தங்கள் திட்டம் என்று கூறியுள்ள தர்ஷன் பால், விவசாயிகள் போராட்டம் குறித்து அரசின் பரப்புரைக்கு எதிரான பரப்புரை, விவசாயிகள் சார்பாக நடத்தப்படும் என்று கூறியுள்ளார். நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் இந்தப் பரப்புரை தர்ணா, கருத்தரங்கம், பேரணி ஆகிய வடிவங்களில் நடத்தப்படும் என்றும் தர்ஷன் பால் கூறியுள்ளார்.
“ஜனவரி 18 ஆம் தேதி, பெண் விவசாயிகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ‘பெண் விவசாயிகள் தினம்’ அனுசரிக்கப்படும். ஜனவரி 23ஆம் தேதி, நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்தநாளன்று, அனைத்து மாநில ஆளுநர் மாளிகை முன்பு பேராட்டம் நடத்துவதன் மூலம் ‘சுதந்திர இந்திய விவசாயிகள் தினம்’ அனுசரிக்கப்படும்” என்று தர்ஷன் பால் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் அமைதியாகவே இருக்க (போராட) விரும்புகிறோம். ஒன்று 3 சட்டங்களையும் திரும்ப பெருங்கள் அல்லது எங்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்துங்கள் என்று பேச்சுவார்த்தையின் போது அரசிடம் தெரிவித்துள்ளோம். நாங்கள் எந்த மோதலையும் விரும்பவில்லை, அமைதியாகவே இருக்க விரும்புகிறோம். ஆனால், அரசு காவல்துறையை பயன்படுத்துவது அவர்களுடைய விருப்பம்” பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர், பல்பீர் சிங் ராஜேவால் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
யூதர்களின் பல்கலைக் கழகத்திற்குச் சென்ற ஹிட்லர் – இது புனைவுக் கதையல்ல
குடியரசு தினத்தன்று டெல்லிக்குள் நுழைவதற்கு இதுவரை காவல்துறையிடம் அனுமதி பெறவில்லை என்று கூறியுள்ள விவசாயிகள் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ள விவசாயிகளும் குடியரசு தினத்தன்று பேரணி நடத்துவார்கள் என்று பேராடும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.