Aran Sei

’எல்லோருடைய வீட்டிலும் அம்பேத்கர் புகைப்படம்’ : விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

ரியானாவில் நடைபெற்ற மகாபஞ்சாயத்து கூட்டத்தில், விவசாயிகளுக்கும் தலித்துகளுக்கமான இணக்கத்தை அதிகரிக்க விவசாயிகள் அனைவரின் இல்லத்திலும் ”அம்பேத்கருடைய புகைப்படத்தை” வைக்க வேண்டும் எனும் தீர்மானம் நிறைவேறப்பட்டதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி கடந்த 75 நாட்களுக்கும் மேலாக டெல்லி எல்லைகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. பல்வேறு மாநிலங்களில் மகாபஞ்சாயத்து கூட்டங்களும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்றைய தினம் (20-2-21), ஹரியானா மாநிலம், ஹிசார் மாவட்டத்தில், தலித்துகளுக்கான மகாபஞ்சாயத்து கூட்டம் நடைபெற்றது. இது விவசாயிகள் போராட்டத்தை, சாதிய முரண்களைக் கடந்து இந்தியா முழுமைக்கும் கட்டமைக்கும் திட்டமாக பார்க்கப்படுகிறது. ஹரியானாவில் 20 சதவீதம் தலித்துகள் வாழ்கின்றனர்.

” மத ரீதியாகவும், மாநில ரீதியாகவும் மக்களை பிரிக்க பாஜக அரசு சதி ” : ராகேஷ் திகாயத்

இந்தக் கூட்டத்தில், விவசாயிகளுக்கும் தலித்துகளுக்கமான இணக்கத்தை அதிகரிக்க விவசாயிகள் அனைவரின் இல்லத்திலும் ”அம்பேத்கருடைய புகைப்படத்தை” வைக்க வேண்டும் எனும் தீர்மானம் நிறைவேறப்பட்டதாக என்டிடிவியின் செய்தி தெரிவிக்கிறது. ஆங்கிலேயேர் காலத்தில் தலித்துகள் தங்கள் இல்லத்தில் ஜாட் சமூகத்தின் தலைவர் ”சோட்டு ராமினுடைய” புகைப்படத்தை வைக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.

விவசாயிகள் மீது இந்திய அரசின் அடக்குமுறை: ஐ.நா சபைக்கு எடுத்துச் செல்ல அமெரிக்க அதிபரை வலியுறுத்தும் இந்திய வம்சாவளியினர்

இந்தக் கூட்டத்தில் பேசிய விவசாயிகள் சங்க தலைவர், குர்னம் சாதுனி, “நமது போராட்டம் அரசாங்கத்தை எதிர்த்து மட்டுமல்ல, முதலாளிகளையும் எதிர்த்து தான். இன்றைய தினம்வரை அரசாங்கம் நம்மை சாதி ரீதியாகவும் மத ரீதியாகவும் பிளவுப்படுத்த சதி திட்டம் தீட்டி வருகிறது” என்று கூறியுள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

விளைந்த பயிர்களை அழிக்க வேண்டாம் – பாரதிய கிசான் சங்கத் தலைவர் ராகேஷ் திகாத் வேண்டுகோள்

”மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் என்பது விவசாயிகளுக்கானது மட்டுமல்ல விவசாய தொழிலாளர்களுக்குமானது தான். விவசாயிகள் தங்களுடைய பங்கை செய்தாலும், இந்தச் சட்டத்தினால் கடுமையாக பாதிக்கப்பட போவது விவசாய தொழிலாளர்கள் தான். எனவே இந்தப் போராட்டத்திற்கு உழைக்கும் மக்கள் தங்கள் ஆதரவையளித்து போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும்” என்று சாதுனி கோரிக்கை விடுத்துள்ளதாக அச்செய்தி கூறியுள்ளது.

போதைப் பொருள் கடத்தலில் கைதான பாஜக இளைஞரணி செயலாளர் – போதை பழக்கத்திற்கு அடிமையானவரென்று தந்தை குற்றச்சாட்டு

மூன்று வேளாண் சட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வு, பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகளிடத்தில் ஏற்பட்டு விட்டது எனவும் மற்ற மாநிலங்களில் இது தொடர்பான புரிதலை ஏற்படுத்த வேண்டும் எனவும் சாதுனி, விவசாயிகள் சங்க தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாஜக இளைஞரணி செயலாளர் – பாஜக நிர்வாகி ராகேஷ் சிங்கின் சதித்திட்டம் என குற்றச்சாட்டு

பஞ்சாயத்து தேர்தல்களில், பாஜக ஆதரவு வேட்பாளர்களைத் தவிர்த்து யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள் என விவசாயிகள் சங்க தலைவர் குர்னம் சாதுனி மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது. சமீபத்தில், பஞ்சாப் மாநிலத்தில் நடந்த பஞ்சாயத்து பாஜக பலத்த பின்னடைவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

’எல்லோருடைய வீட்டிலும் அம்பேத்கர் புகைப்படம்’ : விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்