Aran Sei

விவசாய சட்டங்களை ஏற்க முடியாது -’எங்கள் கனவுகள் வீணடிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை’

விவசாய சட்டங்களை ஒன்றரை ஆண்டுகள் ஒத்திவைக்கும் மத்திய அரசின் முன்மொழிவை விவசாயிகள் சங்கங்கள் நிராகரித்ததற்கு, பின்னால் உள்ள முக்கிய காரணம், அந்த முடிவை பஞ்சாப் மாநில மக்கள் எந்நாளும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதுதான்.

ஒவ்வொரு விவசாயிகளின் இதயத்தில் இருந்தும் கொடுக்கப்பட்ட ஆதரவின் காரணமாகவே இந்தப் போராட்டம் வெற்றிகரமாக நடந்து வருகிறது. டெல்லியில் எடுக்கப்படும் எந்தவொரு முடிவும் பஞ்சாப்பில் உள்ள ஒவ்வொரு விவசாயிகளின் உணர்வுகளிலும் பிரதிபலிக்கும் என்று பஞ்சாப் விவசாயிகள் தங்கள் மனங்களை திறந்து பேசியுள்ளனர்.

டிராக்டர் பேரணி: பஞ்சாபில் தொடங்கிய பிரச்சார இயக்கம் – பெண்கள் வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டி வருகின்றனர்

ஒருவேளை, மத்திய அரசின் அந்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டு விவசாயிகள் சங்கங்கள் பஞ்சாப்பிற்கு திரும்பி வந்தால், அவர்கள் மீது மக்கள் வைத்துள்ள நம்பத்தன்மையை இழந்து நிற்பார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

சங்ரூரில் உள்ள தரம்கர் கிராமத்தில் 3 ஏக்கர் நிலம் வைத்துள்ள சிறு விவசாயியான குர்விந்தர் சிங் பேசும்போது, “நமக்கு சரியான பதிலைச் சொல்லாமல், அரசு நேரம் கடத்தலாம். ஆனால் இவ்வளவு என்ணிக்கையிலான போராடும் மக்களை அரசால் புறக்கணிக்க முடியாது. வெற்றியடையாமல் யாரும் திரும்பி வரமாட்டோம் என்று எங்கள் விவசாயிகள் சங்க தலைவர்கள் பலமுறை கூறியுள்ளனர். மத்திய அரசை மூன்று சட்டங்களை ரத்து செய்ய வைப்பதற்கும், அனைத்து விவசாய விளைப் பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிப்படுத்தும் சட்டத்தை இயற்ற வைக்கவும் தான் டெல்லிக்கு சென்றோம். அதை நடக்க வைக்காது பின் வாங்கி வீடு திரும்பினால், டெல்லிக்கு சென்றதில் என்ன பயன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பஞ்சாபில் ஒரு ட்ராக்டர் கூட இருக்க கூடாது, கிளம்புங்கள் – பேரணிக்கு அழைப்பு விடுக்கும் விவசாய சங்கங்கள்

கனக்வால் கிராமத்தில் ஆறு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யும் பூட்டா சிங், “விவசாயிகள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட பின்னரே நாங்கள் திரும்பி வருவோம் என்று எங்கள் தலைவர்கள் தெளிவாகக் கூறினார். விவசாயிகள் இந்தப் போராட்டத்தை ஆதரிப்பதற்கான காரணமும் இதுதான்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதே கிராமத்தைச் சேர்ந்த மம்தா ராணி என்ற விவசாயி பெண்ணும்,  இதே நம்பிக்கையையே பற்றியுள்ளார். “ நவம்பர் 26 முதல் தன்னுடைய குடும்பம் திக்ரி எல்லையில் இருக்கிறது. நாங்கள் இங்கு கிராமத்தில் கனவுகளை சுமந்துக்கொண்டு, சலனமற்ற எங்களின் இரவுகளை கழித்து வருகிறோம். மத்திய அரசின் முன்மொழிவை ஏற்பதன் வழியாக, எங்கள் கனவுகள் அனைத்தும் வீணடிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை.” என்று மம்தா ராணி உறுதிப்படுத்தியுள்ளார்.

குடியரசு தின டிராக்டர் பேரணி: கலந்து கொள்ள பயிற்சி பெறும் பெண்கள்

மேலும், “போராட்டக்காரர்கள் யாரும் வெறுங்கையுடன் ஊர் திரும்ப மாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன் தான் பஞ்சாபில் உள்ள விவசாயிகள்  எல்லோரும் இருக்கிறார்கள். இந்தப் போராட்டமானது அவர்களின் இதயத்தில் வேரூன்றிவிட்டது. அரசின் முன்மொழிவை சில தலைவர்கள் ஒப்புக் கொண்டாலும், மக்கள் எந்நாளும் அது ரத்து செய்யப்படுவதை மட்டும்தான் விரும்புகிறார்கள்.” என்று கூறியுள்ளார்.

“பஞ்சாப்பை சேர்ந்த 32 சங்கங்களில் சில விவசாய சங்கங்கள் மத்திய அரசின் முன்மொழிவுக்கு ஆதரவு தெரிவித்ததாக வெளியான தகவல்களுக்குப் பிறகு,  விவசாயிகளின் மனங்களில் ஒரு அமைதியின்மை சூழத்தொடங்கியுள்ளது. மேலும் சட்ட ரத்தை தவிர்த்து மற்ற தீர்வுகளுக்கு எப்படி அவர்கள் சம்மதம் தெரிவித்தார்கள் என்று மக்கள் உங்களிடம் கேள்விக் கேட்க தொடங்கிவிட்டார்கள்.” என்று பாரதி விவசாயிகள் சங்கத்தின் (உக்ரஹான்) உள்ளூர் தலைவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரி 26 பேரணி – லட்சம் டிராக்டர்களை அணிதிரட்டும் விவசாயிகள் சங்கங்கள்

“ஒரு குறிக்கோளுடன் டெல்லி சென்ற எங்கள் தலைவர்கள், சட்டங்களை ரத்து செய்வதைத் தவிர வேறு எதையும் ஏற்றுக்கொள்வதில் ஒரு அர்த்தமும் இல்லை. சட்டங்கள் ரத்து செய்யப்படும் என்பதால் தான், முழு மனதுடன் எங்கள் குடும்பங்களை டெல்லிக்கு அனுப்பினோம். இப்போது நடக்கத் தொடங்கியிருக்கும் போராட்டமானது பாஞ்சாப்பில் உள்ள பாமர விவசாயிகளால் வழிநடத்தப்படும் போராட்டம்.” என்று மான்சாவைச் சேர்ந்த விவசாயி குல்வந்த் சிங் சுட்டிக்காட்டியுள்ளார்.

“டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு ரேஷன் பொருட்களையும் பிற அத்தியாவசி பொருட்களையும் சேகரிப்பதற்காக எங்கள் கிராம மக்களிடம் சென்றோம். எந்தப் பங்களிப்பையும் திறந்த மனதுடன் தர மக்கள் தயாராகவுள்ளனர். ஆனால், விவசாயிகளின் தலைவர்கள் சட்ட ரத்தை தவிர வேறு முடிவிற்கு உடன்படுவதைக் கேட்க அவர்கள் என்றைக்கும் தயாராக இல்லை.” என்று விவசாயிகள் மஜ்தூர் சங்கர்ஷ் குழுத் தலைவர் கூறியுள்ளார்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸில் வந்த கட்டுரையின் மொழிப்பெயர்ப்பு

விவசாய சட்டங்களை ஏற்க முடியாது -’எங்கள் கனவுகள் வீணடிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை’

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்