லக்கிம்பூர் கலவரத்திற்கு காரணமான ஒன்றிய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவிற்கு பிணை வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கூட்டத்தினுள் கார் புகுந்ததில் 4 விவசாயிகள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர்.
கலவரத்திற்கு காரணம் என ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு அலகாபாத் உயர்நீதிமன்ற பிணை வழங்கியுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
பிணை வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து உத்திரபிரதேச அரசு மனுத்தாக்கல் செய்யாததால், நாங்கள் மனு தாக்கல் செய்துள்ளோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக இருக்கு பெரும் சாட்சியங்களை நீதிமன்ற கவனத்தில் கொல்லவில்லை என அவர்கள் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
குற்றம்சாட்டப்பட்டவரின் பின்புலம் மற்றும் அவரது தந்தை ஒர் அமைச்சர் என்கிற காரணங்களால், அவர் தண்டனையில் இருந்து தப்புவதோடு மீண்டும் இது போன்ற குற்றத்தைச் செய்ய வாய்ப்புள்ளது மற்றும் அவர் சாட்சியங்களை அழிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஷிஷ் மிஸ்ராவிற்கு பிப். 10 தேதி பிணை வழங்கிய அலகாபாத் உயர்நீதிமன்றம், போராட்டக்காரர்கள்மீது ஒடிய வாகனத்தை ஓட்டிய ஓட்டுநர், கூட்டத்திற்கு பயந்து தன்னை தற்காத்துக் கொள்ள வாகனத்தின் வேகத்தை அதிகரித்து இருக்கலாம் என கூறியிருந்தது.
”உயிரிழந்தவர்கள் உடலில், வாகனம் ஏறியதற்கான காயம் தவிர துப்பாக்கி குண்டு காயமோ அல்லது வேறு எந்த காயமோ இல்லை. மேலும், ஆயிரக்கணக்கானவர்கள் கூடியிருந்ததால், தன்னை தற்காத்துக் கொள்ள ஓட்டுநர் வாகனத்தின் வேகத்தை அதிகப்படுத்த முயற்சித்திருக்கலாம். இதனால் கூட விபத்து ஏற்பட்டிருக்கலாம்” என உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
Source : The Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.