ஃபேஸ்புக்கில் பகிரப்படும் தகவல்களுக்கு உள்ளூர் வெளியீட்டாளர்களுக்குப் பணம் செலுத்த வேண்டும் என்ற ஆஸ்திரேலிய அரசின் சட்டத்தால் அதிருப்தியில் இருக்கும் ஃபேஸ்புக் நிர்வாகம், வியாழன் (பிப்ரவரி 18) அன்று, ஃபேஸ்புக்கில் பதியப்பட்டிருந்த அனைத்து செய்திகளையும் முடக்கியதால், வெற்று பக்கங்களாக இருந்த தங்களது கணக்குகளைக் கண்டு ஆஸ்திரேலிய செய்தி நிறுவனங்கள் அதிர்ச்சியடைந்துள்ளன.
செய்திகளுடன் சேர்த்து, அதிகாரப்பூர்வ சுகாதார பக்கங்கள், அவசரகால பாதுகாப்பு தகவல்கள், மக்கள்நலன்சார் பக்கங்களும் முடக்கப்பட்டது, செய்தி வெளியிட்டாளர்கள், அரசியல்வாதிகள் மனித உரிமை செயல்பாட்டாளர்களின் உடனடி விமர்சனத்திற்கு உள்ளானது.
இது தொடர்பாக பேசிய, ஆஸ்திரேலியாவின் வருவாய் மற்றும் செலவீன அமைச்சர் ஜோஷ் ஃப்ரைடென்பெர்க், ”ஃபேஸ்புக்கின் இந்த நடவடிக்கை தேவையற்றது, கடுமையானது மற்றும் ஆஸ்திரேலியாவில் அந்நிறுவனத்தின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது” எனக் கூறியுள்ளார்.
உள்ளூர் செய்தி வெளியீட்டாளர்களுக்கு, கட்டணம் செலுத்த வலியுறுத்தும் சட்டங்களைத் தளத்துவது தொடர்பாக, கடந்த வாரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது கூட, ஃபேஸ்புக்கின் தலைமை நிர்வாகி மார்க் ஜுக்கர்பெர்க், இதுகுறித்து எதுவும் குறிப்பிடவில்லை என, ஜோஷ் ஃப்ரைட்ன்பெர்க் கூறியுள்ளார்.
அரசின் புதிய சட்டங்களை எதிர்த்துத் தங்களது சேவைகளை ரத்து செய்து கொள்வதாக ஃபேஸ்புக் மற்றும் கூகுள் கூறிவந்த நிலையில், கூகுள் நிறுவனம் சில ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.
கூகுள் தேடுதளத்தில், செய்திகளை காட்டுவதற்காக வழங்கப்படும் தொகைக்கு ஈடாக, ‘கணிசமான தொகை’ கூகுள் நிறுவனத்திடமிருந்து பெறும் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாக, ரூபர்ட் முர்டோக்கி நியூஸ் கார்ப் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனத்தின் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவிக்க, கூகுள் நிறுவனம் மறுத்துவிட்டது.
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ள சட்டம், தங்களுக்கும் செய்தி வெளியீட்டாளருக்கும் இடையில் இருக்கும் உறவை ”அடிப்படையில் தவறாக புரிந்து கொள்கிறது” எனவும், ஒரு செய்தியைத் தடை செய்யும் விதமான பார்வையை கொண்டுள்ளது எனவும், ஃபேஸ்புக் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவிட்-19 பரவலை தடுக்கும் விதமாக நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தை, ஆஸ்திரேலிய அரசு முன்னெப்பதற்கு மூன்று தினங்களுக்கு முன்பாக, ஆஸ்திரேலியா தொடர்பாக செய்தி நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் பதிவிடும் செய்திகளை முடக்கும் வகையில், ஃபேஸ்புக் நிறுவனத்தின் நடவடிக்கை அமைந்துள்ளது.
தொழிலாளர்களின் பொருளாதார நெருக்கடி – 100 நாள் வேலைத் திட்டத்தில் மாதம் 2 கோடி குடும்பங்கள்
தி சிட்னி மார்னிங் ஹெரால்ட் செய்திதாளின் ஆசிரியர் லிசா டேவிஸ், தனது ட்விட்டரில், ”ஆபத்தான, தவறான மற்றும் சதி கோட்பாடுகளைப் பெருக்கும் வாய்ப்பை, ஃபேஸ்புக் தனது தளத்தின் வாயிலாக அதிகரித்துள்ளது” எனப் பதிவிட்டிருந்தார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஒரு மனித உரிமை அமைப்பு, “இது ஆபத்தான மற்றும் எச்சரிக்கும் வகையிலான நிகழ்வுகளின் திருப்பம்”, எனவும், ”ஒரு நாட்டிற்கு தேவையான தகவல்களை ஒரு இரவில் துண்டித்துவிட முடியாது” எனவும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வளர்ந்து வரும் 100 தலைவர்கள் பட்டியலில் சந்திரசேகர் ஆசாத் – டைம்ஸ் பத்திரிகை அறிவிப்பு
தகவல்தொடர்புத்துறை அமைச்சர் பால் பிளெட்சர் “ஆஸ்திரேலியர்களுக்கு ஃபேஸ்புக் ஒரு செய்தி அனுப்பியுள்ளது. அதில் “தொழில்முறை ஊடகவியலாளர்களைப் பயன்படுத்தும் ஒரு அமைப்பிலிருந்து வரும் செய்திகளை, எங்கள் தளத்தில் நீங்கள் காண முடியாது, என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது” எனக் கூறியுள்ளார்.
சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட் ஏராளமான சமூக சுகாதார திட்டங்களின்ஃ பேஸ்புக் பக்கங்கள் முடக்கப்பட்டிருப்பதால், “குழந்தைகள் புற்றுநோய் திட்டம் பாதிக்கப்படக்கூடும் என்றும், இது ஒரு அவமானகரமான நிகழ்வு” என்றும் கூறியுள்ளார்.
Source : Reuters
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.