கடந்த ஏப்ரல் மாதத்தில் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் வெறுப்பு பதிவுகளின் அளவு 82 விழுக்காடு அதிகரித்துள்ளது. சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் வன்முறையை தூண்டும் பதிவுகள் 86 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று மெட்டா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 31 அன்று மெட்டா வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, பேஸ்புக் ஏப்ரல் மாதத்தில் 53,200 வெறுப்பு பதிவுகளை கண்டறிந்தது. இது மார்ச் மாதத்தில் கண்டறியப்பட்ட 38,600 வெறுப்பு பேச்சுக்களுடன் ஒப்பிடும்போது 82 விழுக்காடு அதிகமாகும். இன்ஸ்டாகிராமில் மார்ச் மாதத்தில் 41,300 வன்முறையை தூண்டும் பதிவுகள் பதிவாகியிருந்தன. அது ஏப்ரல் மாதத்தில் 77,000 ஆக அதிகரித்துள்ளது.
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்படும் பதிவுகள், புகைப்படங்கள், காணொளிகள் ஆகியவற்றை நாங்கள் அளவிடுகிறோம். எங்கள் தரநிலைகளுக்கு எதிராக இருக்கும் பதிவுகள் மீது நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று மெட்டா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Source : NDTV
இந்த சவுண்ட்லாம் இங்க வேணாம் Annamalai | Surya Xavier Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.