தேர்தல் நேரங்களில் வாக்காளர்களைக் கவருவதற்காக அரசியல் கட்சிகளால் அறிவிக்கப்படும் இலவசங்களை கட்டுப்படுத்த நிதி ஆயோக், நிதி ஆயோக், தேர்தல் ஆணையம் , ரிசர்வ் வங்கி மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதித்துவத்துடன் நிபுணர் குழுவை குழுவை அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
தேர்தல் நேரத்தில் வாக்காளர்களை கவர, அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவச பொருட்கள், வாக்குறுதிகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் தேர்தல் பிரச்சாரத்தில், அரசு நிதியில் இருந்து இலவச திட்டங்களை வழங்குவோம் என வாக்குறுதி அளிப்பது லஞ்சம் கொடுப்பதற்கு இணையானது. இதை தடுக்க வேண்டும் என கூறப்பட்டது.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் கிருஷ்ணா முராரி மற்றும் ஹிமா கோலி ஆகிய 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில், ‘‘ இலவசங்களை ஒழுங்குபடுத்துவது பற்றி நாடாளுமன்றம் விவாதிக்கும் என்று நீங்கள் தீவிரமாக நினைக்கிறீர்களா? எந்த அரசியல் கட்சி இந்த பிரச்சினையை விவாதிக்கும்? தேர்தலுக்கு முன் இலவசங்களை தடை செய்வதை எந்த அரசியல் கட்சியும் ஏற்காது. தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் இஷ்டத்துக்கு இலவச அறிவிப்புகளை வெளியிடுவது பொருளாதார சீரழிவுக்கு வழி வகுக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.
ஆந்திரா: தொழிற்சாலையில் விஷவாயு கசிவு – 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதி
வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவச திட்டங்களை கண்காணிக்க நிபுணர் குழு தேவை. இந்த குழுவில் நிதி ஆயோக், நிதி ஆணையம், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ரிசர்வ் வங்கி மற்றும் இதர தரப்பினர் இடம் பெற வேண்டும். அவர்கள் தேர்தல் பிரசாரத்தின் போது அரசியல் கட்சியினரின் இலவச அறிவிப்புகளை கட்டுப்படுத்துவது பற்றிய ஆலோசனைகளை மத்திய அரசு, தேர்தல் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத்துக்கு வழங்க வேண்டும்.
அரசியல் கட்சியினர் அறிவிக்கும் இலவச வாக்குறுதிகள் நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதால், அதன் சாதக, பாதகங்களை தீர்மானிக்க இந்த குழு தேவை. இந்த நிபுணர் குழு அமைப்பது குறித்து மனுதாரர்களும், மூத்த வழக்கறிஞரும், எம்.பி.யுமான கபில் சிபல் ஆகியோரும் ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் சரியான நடவடிக்கை எடுக்காததால் இந்த நிலை ஏற்பட்டது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Source: indianexpress
Kanal Kannan controversial speech about Srirangam Periyar Statue – Mani Amuthan Interview | H.Raja
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.