Aran Sei

அரசு மருத்துவமனைகளில் விலை உயர்ந்த மருந்துகள் ஏழைகளுக்கு கிடைப்பதில்லை – சென்னை உயர்நீதிமன்றம்

Image Credits: Wikipedia

ரசு மருத்துவமனைகளில் கொள்முதல் செய்யப்படும் விலை உயர்ந்த மருந்துகள் ஏழைகளுக்கு கிடைப்பது இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

கோவை அரசு மருத்துவமனைக்கு அளவுக்கு அதிகமாக மருந்துகளை கொள்முதல் செய்ததால், அவை காலாவதியாகி விட்டது. இதனால் அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டது என்று அந்த மருத்துவமனையின் மருந்து கொள்முதல் அதிகாரி முத்துமாலை ராணிக்கு எதிராக அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

‘மலையாளத்தில் பேச தடை விதித்த டெல்லி அரசு மருத்துவமனை’ – எதிர்ப்பு தெரிவிக்கும் செவிலியர்கள்

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், முத்துமாலை ராணி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், “அரசு மருத்துவமனையில் காலாவதியான மருந்துகள் நோயாளிகளுக்கு வழங்கப்படுவதாக பொதுவான குற்றச்சாட்டு உள்ளது. மேலும் தமிழ்நாடு முழுவதும் புதிது புதிதாக நோய்கள் வருகின்றன. இதற்கு என்ன காரணம்? இந்த நோய்களை மருந்து நிறுவனங்களே பரப்புகின்றனவா?” என்று கேள்வி கேட்டு, அதுகுறித்து தமிழ்நாடு அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் டி.சுதன்ராஜ் ஆஜராகி வாதிட்டார். அரசு தரப்பில், புதிய நோய்கள் குறித்தும், மருந்து நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்தும் விரிவான அறிக்கை தயாரித்து வருவதால், அதை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரணையை வருகிற நவம்பர் 2-ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

ஒன்றாக அறிவித்த 2 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் ஒன்றை பாஜக அரசு திறந்துந்துள்ளது, மதுரையில் சுவர் கூட கட்டவில்லை – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

பின்னர், “அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள் வினியோகிப்பது என்பது தீவிரமான குற்றமாகும். இதில் மருந்து நிறுவனங்களுக்கும், சுகாதாரத்துறைக்கும் தொடர்பு உள்ளது. அரசு மருத்துவமனைகளில் கொள்முதல் செய்யப்படும் விலை உயர்ந்த மருந்துகள் உண்மையில் ஏழை மக்களை சென்றடைவதில்லை. ஆனால், ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டதாக ஆவணங்களில் பதிவு மட்டும் செய்யப்படுகிறது” என்று எஸ்.எம்.சுப்பிரமணியம் கருத்து தெரிவித்துள்ளார்

Source : dailythanthi

ஆட்டுக்குட்டியின் குரங்குச் சேட்டை | குட்டி கரணம் அடிக்கும் சங்கிகள் | Aransei Roast | AnnamalaiBJP

அரசு மருத்துவமனைகளில் விலை உயர்ந்த மருந்துகள் ஏழைகளுக்கு கிடைப்பதில்லை – சென்னை உயர்நீதிமன்றம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்