இந்திய அரசியலமைப்பு சட்டத்தை நான் எப்போதும் பின்பற்றி வருகிறேன். நமது அழகான நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் இதைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் இன்று (ஏப்ரல் 23) ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
Always followed this and I urge each citizen of our beautiful country to follow this. Please read and re-read… 🇮🇳 pic.twitter.com/Vjhf6k3UaK
— Irfan Pathan (@IrfanPathan) April 23, 2022
இர்பான் பதான் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது நாடு, எனது அழகான நாடு, உலகில் மிகப்பெரிய நாடாக இருப்பதற்கான ஆற்றல் உள்ளது. ஆனால்,…” என்று எழுதி முடிக்கப்படாத ஒரு ட்வீட்டை நேற்று (ஏப்ரல் 22) இர்பான் பதான் பகிர்ந்திருந்தார்.
இர்பான் பதான் எழுதிய அவ்வரியை நிறைவும் செய்யும் வகையில் முன்னாள் கிரிக்கெட் வீரரான அமித் மிஸ்ரா, தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது நாடு, எனது அழகான நாடு, உலகில் மிகப்பெரிய நாடாக இருப்பதற்கான ஆற்றல் உள்ளது. ஆனால், நமது அரசியலமைப்புச் சட்டம்தான் நாம் பின்பற்றப்பட வேண்டிய முதல் புத்தகம் என்பதைச் சிலர் உணர்ந்தால் மட்டுமே அது சாத்தியம்” என்று எழுதியுள்ளார்.
அவர்களின் ட்வீட்களுக்கான சூழலை இருவரும் விளக்கவில்லை என்றாலும், டெல்லியின் ஜஹாங்கிர்புரியில் நடந்த வன்முறை மற்றும் நாட்டின் பிற இடங்களில் நடந்த வகுப்புவாத மோதல்கள்தான் இந்த ட்வீட்டுகளுக்கு பின்னால் இருப்பதாக, டிவிட்டர் பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இருவரின் ட்வீட்டுக்கும் ஆதரவுகளும் எதிர்ப்புகளும் டிவிட்டரில் உருவாகியுள்ளன. இர்பான் பதான், அமித் மிஸ்ரா ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகிறது.
பாஜகவை எதிர்த்திருந்தால் இளையராஜாவின் பின் தமிழ்நாடு திரண்டிருக்கும்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.