இந்தியா என்ற பெரிய தேசத்திற்கு சிறிய நாடுகள் கூட சவால் விடுகின்றன. இந்த சூழ்நிலைக்கு நாட்டை பாஜக இட்டுச் சென்றுள்ளது என்று ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி துணை முதலமைச்சருமான மணீஷ் சிசோடியா குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதனால் ஒவ்வொரு இந்தியனும் வேதனைப்படுவதாக கூறியுள்ளார்.
முஹம்மது நபி குறித்து பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா அவதூறான கருத்து தெரிவித்திருந்தார். இதற்குப் பல பல வளைகுடா நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.
நபிகளை விமர்சித்த பாஜகவினரை கைது செய்ய வேண்டும் – காங்கிரஸ் வலியுறுத்தல்
மேலும், பாஜகவின் டெல்லி மாநில ஊடக பிரிவுத் தலைவர் நவீன் ஜிண்டால், நபிகள்குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து, பின்னர் நீக்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் மற்றும் ஆர்பாட்டங்கள் நடைபெற்றன. பின்னர் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
உலக நாடுகளின் கண்டன்ங்களைத் தொடர்ந்து, அனைத்து மதங்களையும் மதிப்பதாகவும், எந்த ஒரு மதத்தையோ ஆளுமைகளையோ அவமதிப்பதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் பாஜக அறிக்கையை வெளியிட்டது.
பாஜக ஆட்சியில் நாடு ஓர் உள்நாட்டுப் போரை நோக்கிச் செல்கிறது – லாலு பிரசாத் யாதவ்
இந்நிலையில் ” இந்தியா என்ற பெரிய தேசத்திற்கு சிறிய நாடுகள் கூட சவால் விடுகின்றன.” என்று ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
“மோடி ஜியும் பாஜகவும் நாட்டுக்கு என்ன செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் அதற்காக வேதனைப்படுகிறார்கள், இந்தத் துயரம் முடிவற்றது” என்று மணீஷ் சிசோடியா குறிப்பிட்டுள்ளார்.
Source: Thenewindianexpress
கடும் கோபத்தில் அரபு நாடுகள் ! பம்மும் பாஜக ! Nupur Sharma Comment on Prophet Muhammad
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.