2018 ஆம் ஆண்டு முதல் ஜம்மு & காஷ்மீரில் நடத்தப்படாமல் இருக்கும் சட்டமன்றத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என ஐரோப்பிய யூனியன் கோரிக்கை விடுத்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
ஜம்மு & காஷ்மீரில் நிலவிவரும் சூழ்நிலை தொடர்பாக, கடந்த இரு தினங்களாக ஆய்வு செய்த ஐரோப்பிய ஒன்றியம், ஆகஸ்ட் 5, 2019 ஆம் தேதிக்குப் பிறகு ஜம்மு&காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் திருப்திகரமாக இருக்கிறது, எனக் கூறியிருப்பதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
”மாவட்ட வளர்ச்சி கவுன்சிலுக்கு தேர்தல் நடத்தியிருப்பது, துண்டிக்கப்பட்ட 4ஜி இணைய சேவையை மீண்டும் வழங்கி இருப்பது, ஆகியவற்றை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். சட்டமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடத்துவது உள்ளிட்ட அரசியல் மற்றும் பொருளாதார விசயங்களில் மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகளை நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம்” என ஐரோப்பிய ஒன்றியத்தின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘பேச்சுரிமையும் போராடும் உரிமையும் அடிப்படை மனித உரிமை’ – திஷா ரவிக்கு ஆதரவளித்த கிரேட்டா துன்பெர்க்
பிப்ரவரி 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில், ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகள் உள்ளிட்ட பல்வேறுக் கண்டங்களைச் சேர்ந்த 24 தூதர்கள், ஜம்மு மற்றும் ஸ்ரீநகருக்கு பயணம் மேற்கொண்டு, அந்தப் பகுதியில் மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட பிரதிநிதிகள், குடிமை சமூக உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்ததாக, தி இந்து தெரிவித்துள்ளது.
“கருத்து சுதந்திரத்திற்கான உரிமை என்பது ஜனநாகயத்தின் ஒரு முக்கிய பண்பாகும்” என ஐரோப்பிய ஒன்றியத்தின் செய்தி தொடர்பாளர் கூறியதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பயணத்தால் அங்கு நிலவும் சூழ்நிலையை அறிய முடிந்ததோடு, அந்தப் பகுதியினருடன் உரையாட வாய்ப்பளித்தது என்று கூறிய ஐரோப்பிய ஒன்றிய செய்தி தொடர்பாளர், ”இந்தியாவுடனான எங்கள் உரையாடலைத் தொடர நாங்கள் எதிர்நோக்குகிறோம்” என்றும் தெரிவித்ததாக, தி இந்து கூறியுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.