ஒரு நாள் கூலி ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, இலங்கை மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொழிலாளர்களுக்குக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் அது நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காகவும் மலையகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் இன்று (பிப்பிரவரி 5) கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது என்று தமிழ்வின் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
முத்தையா முரளிதரனும் மறைக்கப்படும் வரலாற்று உண்மைகளும் – சபா நாவலன்
இலங்கை மத்திய மாகாணத்தில் தேயிலை, காப்பி, புகையிலைத் தோட்டங்கள் போன்ற பெருந்தோட்ட தொழில்கள் நடந்து வருகிறது. மலையகம் என்று அழைக்கப்படும் அப்பகுதியில் உள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு நாள் கூலியாக ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு பெருந்தோட்டக் நிறுவனங்கள் இன்னும் சம்மதம் தெரிவிக்கவில்லை.
தொழில் நிபந்தனைகள் அடிப்படையிலேயே சம்பள உயர்வை வழங்குவதற்கு பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தயாராக இருக்கிறார்கள் என்றும் அதனால் சம்பள நிர்ணய சபை ஊடாகச் சம்பளம் தீர்மானிக்கப்பட வேண்டுமென்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றனர் என்றும் தமிழ்வின் செய்தி தெரிவித்துள்ளது.
மேலும், இதன்படி வரும் 8 ஆம் தேதி சம்பள நிர்ணய சபை கூடவுள்ள நிலையில் நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், சம்பள நிர்ணய சபை பேச்சுவார்த்தை வெற்றியளிக்க வேண்டும் என்பதற்காகவும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு, மலையகத்தில் உள்ள பல்வேறு கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருந்தன என்று செய்தி குறிப்பிட்டுள்ளது.
“நகர வர்த்தகர்களும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கடையடைப்பு செய்திருக்கின்றனர். அத்தோடு சில பள்ளிகளும் மூடப்பட்டிருக்கின்றன. மலையகத்தின் முக்கிய நகரங்களான நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, கேகாலை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் வாழும் பகுதிகளில் உள்ள நகரங்களின் கடைகள் மூடப்பட்டிருக்கின்றன.” என்று தமிழ்வின் தெரிவித்துள்ளது.
இலங்கை துறைமுகம் அதானியிடம் வழங்கப்படாது : தொழிற்சங்கங்களின் போராட்டத்திற்கு அடிபணிந்த இலங்கை அரசு
குறிப்பாக, நுவரெலியா மாவட்டத்தில் அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்கியிருக்கிறார்கள் என்றும் தொழிலாளர்களும் வீடுகளில் இருந்தவாறே பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஊதிய உரிமையை வலியுறுத்தி அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகி்றார்கள் என்றும் செய்தி கூறியுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.