“தேர்தல் வரை அமலாக்கத்துறை எங்களை தொந்தரவு செய்து கொண்டே இருப்பார்கள்” என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் நிதி முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் பணமோசடி வழக்கு தொடர்பாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஃபரூக் அப்துல்லாவிடம் அமலாக்கத்துறை இயக்குனரகம் இன்று (மே 31) மூன்று மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தியுள்ளது .
ஏறக்குறைய மூன்றரை மணி நேர விசாரணைக்குப் பிறகு அலுவலகத்தை விட்டு வெளியேறும்போது அவர் நிதானமாகத் தெரிந்தார். ஆனால் வெளியில் காத்திருந்த ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
உமர் காலித்தின் பேச்சுக்கு உபா சட்டத்தைப் பயன்படுத்தி இருக்க கூடாது – டெல்லி உயர் நீதிமன்றம்
ஸ்ரீநகரில் உள்ள அமலாக்கத்துறை இயக்குனரகம் முன் ஆஜரான தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர், “இது போன்ற தாக்கீதுகள் (summons) தேர்தல் நடைபெறும் வரை எங்களைத் தொந்தரவு செய்யும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. தேர்தல் நடைபெறும் வரை, அவர்கள் (அமலாக்க துறையினர்) எங்களை தொந்தரவு செய்து கொண்டே இருப்பார்கள்,” என்று அவர் கூறியுள்ளார்.
பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு ஒரு ‘கலப்படமான அரசு’ – மம்தா பானர்ஜி விமர்சனம்
ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கம் (ஜேகேசிஏ) ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை இயக்குநரகம் அவருக்கு தாக்கீது அனுப்பியுள்ளது. 2001 முதல் 2011 வரை ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக ஃபரூக் அப்துல்லா இருந்துள்ளார். அமலாக்கத்துறையினரால் அவர் விசாரிக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும்.
Source: TheHindu
BJP கும்பலின் சாதி வெறி | Sangathamizhan Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.