Aran Sei

எல்கர் பரிஷத் வழக்கு: சிறை அதிகாரிகள் மனிதாபம் இல்லாமல் நடத்துவதை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடும் சாகர் தத்யாராம்

ல்கர் பரிஷத் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாகர் தத்யாராம் கோரகே சிறை அதிகாரிகளால் துன்புறுத்தல் மற்றும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்ததுவதாக கூறி, மே 21 முதல் மும்பையில் உள்ள தலோஜா சிறையில் காலவரையற்ற  உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

காவல்துறையால் அவர் நடத்தப்படும் விதம் குறித்து மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் திலீப் வால்ஸ் பாட்டீலுக்கு மே 20 ஆம் தேதி கடிதம் எழுதியிருக்கிறார், அக்கடிதத்தில், “ஆரம்பத்தில் இருந்தே பீமா கோரேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சிறை நிர்வாகம் மிகவும் மோசமாக நடத்தியது என்பதை மிகுந்த வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதனால், எனக்கும், எனக்குத் துணையாக இருந்த பிற சிறைக்கைதிகளுக்கும் சிறைச்சாலை ஒரு சித்திரவதை முகாமாக மாறியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

பீமா கோரேகான் வழக்கு: வீட்டுக் காவலுக்கு மாற்றக் கோரிய பத்திரிகையாளர் கவுதம் நவ்லகாவின் மனு – தள்ளுபடி செய்த மும்பை உயர் நீதிமன்றம்

குறைகளை நிவர்த்தி செய்யவும் வரை  உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், ஐந்து கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஒன்று, எல்கர் பரிஷத் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மருத்துவ சேவை வழங்குவதில் அதிகாரிகள் “வேண்டுமென்றே அலட்சியம்” காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.

முதுகுவலி, மூட்டுவலி, தோல் அலர்ஜி போன்ற பல நோய்களால் நான் அவதிப்பட்டு வருகிறேன். ஆனால், சிறை அதிகாரிகள் வேண்டுமென்றே சிகிச்சையை  மறுக்கின்றனர். சிறைக் கண்காணிப்பாளர் மருத்துவ அதிகாரிகளுடன் இணைந்து மருத்துவச் சேவை பெறுவதை தடுக்கிறார். வெளி மருத்துவமனைகளிலிருந்து மருத்துவச் சேவைகளைப் பெறுவது தொடர்பாக நீதிமன்றம் தனது உத்தரவைத் தெளிவுபடுத்தியிருந்தாலும், கண்காணிப்பாளரும் மருத்துவ அதிகாரிகளும் தன்னிச்சையாக முடிவெடுக்கின்றனர் என்று கூறியுள்ளார்.

‘பீமா கோரேகான் வன்முறை’ – காவல்துறை இணை ஆணையரை ஆஜராக விசாரணை ஆணையம் உத்தரவு

எல்கர் பரிஷத்  வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கௌதம் நவ்லகா, ரமேஷ் கெய்ச்சோர், சுதிர் தவாலே, மகேஷ் ராவுத், சுரேந்திர காட்லிங், ஆனந்த் டெல்டும்டே, ஹனி பாபு ஆகியோரும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் சிகிச்சை அளிப்பதில் வேண்டுமென்றே அலட்சியம் காட்டப்படுகிறது என்று சாகர் தத்யாராம் கோரகே தெரிவித்துள்ளார்.

இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் தனக்கும், இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கும் கிடைத்த ஒவ்வொரு கடிதத்தையும் “சட்டவிரோதமாக” பிரதி எடுக்கப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மூன்று, “சிறையில் திட்டமிடப்பட்ட தண்ணீர் பற்றாக்குறை,  மரியாதை குறைவான முறையில் தண்ணீர் கொடுக்கப்படுவதை முடிவு கட்ட வேண்டும்.

பீமா கொரேகான் – ஸ்டான் சாமி – வெளியிலிருந்து திணிக்கப்பட்ட பொய் ஆவணங்கள்: சில குறிப்புகள் – அ. மார்க்ஸ்

“சிறை விதிகளின்படி, ஒவ்வொரு கைதியும் 135 லிட்டர் தண்ணீரைப் பெற வேண்டும். ஆனால் தலோஜா மத்திய சிறை நிர்வாகம் ஒவ்வொரு கைதிக்கும் ஒரு வாளி, அதாவது 15 லிட்டர் தண்ணீரை மட்டுமே வழங்குகிறது. 15 லிட்டர் தண்ணீரை வைத்துக் கைதிகள் உயிர்வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

பீமாகோரேகான் வழக்கு : நிராகரிக்கப்பட்ட பிணை மனுக்களும் ஊசலாடும் நீதியும்

நான்கு, சிறைக்கு வரும் பார்வையாளர்களுக்குச் சுத்தமான குடிநீர், சுகாதாரம், மின்விசிறிகள் மற்றும் பிற வசதிகளை செய்து கொடுப்பதுடன் நிரந்தர பார்வையாளர் அறையும் உடனடியாக கட்டப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐந்து, கொரோனா  தொற்றுநோயின்போது கைதிகளுக்குக் கிடைக்கப்பெற்ற தொலைபேசி சேவைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. அதை, மீண்டும் வழங்குமாறு சாகர் தத்யாராம் கோரகே கோரியுள்ளார். இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்திச் காலவரையற்ற  உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

Source: thewire

Annamalai-க்கு கருத்து சுதந்திரம் பத்தி பேச தகுதி கிடையாது Pasumpon Pandian

எல்கர் பரிஷத் வழக்கு: சிறை அதிகாரிகள் மனிதாபம் இல்லாமல் நடத்துவதை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடும் சாகர் தத்யாராம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்