Aran Sei

எல்கர் பரிஷத் வழக்கு – சமூகச் செயற்பாட்டாளர் கவுதம் நவ்லகாவின் பிணை மனுவை நிராகரித்த என்ஐஏ சிறப்பு நீதிமன்றம்

credits : the wire

ல்கர் பரிஷத் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சமூகச் செயற்பாட்டாளரும் பத்திரிகையாளருமான கவுதம் நவ்லகாவின் பிணை மனுவை என்ஐஏ  சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கவுதம் நவ்லகா ஆகஸ்ட் 28, 2018 அன்று கைது செய்யப்பட்டார்.  முதலில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். பின்னர் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டு மும்பையில் உள்ள தலோஜா சிறையில் அடைக்கப்பட்டார்.

வெடிகுண்டு தயாரிக்க பயிற்சியளித்து இஸ்லாமியர்கள் மேல் பழி சுமத்தும் ஆர்எஸ்எஸ் – முன்னாள் ஊழியர் குற்றச்சாட்டு

கவுதம் நவ்லகாவின் பிணை மனுவை சிறப்பு நீதிபதி ராஜேஷ் ஜே கட்டாரியா நிராகரித்துள்ளார்.

நம் நாடு பிளவுபடுத்தப்படுவதை நாம் நிறுத்த வேண்டும் – தொழிலதிபர் நாதிர் கோத்ரேஜ்

முன்னதாக, 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புனேவில் நடைபெற்ற எல்கர் பரிஷத் மாநாட்டைத் தொடர்ந்து, மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு சுதா பரத்வாஜ், ஆனந்த டெல்டும்டே உள்ளிட்ட பல சமூக செயற்பாட்டாளர்களும் எழுத்தாளர்களும் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: newindianexpress

ஒன்று கூடிய தென்னிந்தியா, தலைமையேற்கும் ஸ்டாலின் | Indra Kumar Theradi | PTR | MK Stalin | Amit Shah

எல்கர் பரிஷத் வழக்கு – சமூகச் செயற்பாட்டாளர் கவுதம் நவ்லகாவின் பிணை மனுவை நிராகரித்த என்ஐஏ சிறப்பு நீதிமன்றம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்