Aran Sei

எல்கர் பரிஷத் வழக்கு: சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டேவுக்கு பிணை வழங்கி மும்பை நீதிமன்றம் உத்தரவு

credits : the indian express

ல்கர் பரிஷத் வழக்கில் கைதான சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டேவுக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.

புனேயில் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி எல்கர் பரிஷத் மாநாடு நடந்தது. இதையடுத்து மறுநாள் பீமா கோரேகானில் நடந்த போர் வெற்றி தின பேரணியில் கலவரம் வெடித்தது. இதையடுத்து காவல்துறையினர் எல்கர் பரிஷத் மாநாட்டில் கலந்துகொண்ட ஆனந்த் டெல்டும்டே உள்ளிட்ட சமூக செயற்பாட்டாளர்கள் பேசிய கருத்தால் தான் கலவரம் ஏற்பட்டதாக கூறி, அவரை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாறியது.

சகோதரர் மறைவால் தாயை சந்திக்க பிணை கோரிய ஆனந்த் டெல்டும்டே – நிராகரித்த நீதிமன்றம்

ஆனந்த் டெல்டும்டே கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நவிமும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டார். இவர் தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்டு உள்ளிட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் என்.ஐ.ஏ. தரப்பில் கூறப்படுகிறது.

இந்தநிலையில் 73 வயதான அவர் பிணை கேட்டு மும்பை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏ.எஸ். கட்காரி, எம்.என்.ஜாதவ் “பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் தான் சிறைத் தண்டனை வழங்க முடியும். விசாரணை கைதியான ஆனந்த் டெல்டும்டே ஏற்கனவே 2 ஆண்டுகளுக்கு மேல் சிறையி இருந்துவிட்டார்” என கூறி அவருக்கு பிணை வழங்கினர்.

அம்பேத்கரை விமர்சனப்பூர்வமாக அணுகினால் சாமி குத்தமா? – ஆனந்த் டெல்டும்டே

இதற்கிடையே நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வசதியாக பிணை வழங்கி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்குமாறு என்.ஐ.ஏ. கேட்டுக் கொண்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் பிணை வழங்கி பிறப்பித்த உத்தரவுக்கு ஒருவாரம் இடைக்காலத் தடை விதித்தது. இதன் காரணமாக பிணை கிடைத்தாலும் உடனடியாக ஆனந்த் டெல்டும்டேவால் சிறையில் இருந்து வெளியே வர முடியாது.

Source : the wire

ட்விட்டரை புதைத்த எலான் மஸ்க் | #RipTwitterயை ட்ரெண்டாக்கும் நெட்டிசன்கள் | Aransei Roast | Elonmusk

எல்கர் பரிஷத் வழக்கு: சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டேவுக்கு பிணை வழங்கி மும்பை நீதிமன்றம் உத்தரவு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்