பேட்டரியில் இயக்கப்படும் இரு சக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவங்களை தொடர்ந்து ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் 1,441 வாகனங்களை திரும்பப் பெற்றுள்ளது.
புனேவில் மார்ச் 26 அன்று நடந்த தீ விபத்து குறித்த விசாரணை நடந்து வருவதாகவும், முதற்கட்ட மதிப்பீட்டில் அது தனிமைப்படுத்தப்பட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
விலைவாசி உயர்வு: சாமானியர்களின் சேமிப்பை சூறையாடிய ஒன்றிய அரசு – காங்கிரஸ் குற்றச்சாட்டு
இருப்பினும், “முன்கூட்டிய நடவடிக்கையாக குறிப்பிட்ட தொகுப்பில் உள்ள இருசக்கர வாகனங்கள் மீது விரிவான சோதனையை மேற்கொள்ள இருக்கிறோம். எனவே 1,441 வாகனங்களை நாங்களாக முன்வந்து திரும்பப் பெறுகிறோம்.” என்று ஓலா எலக்ட்ரிக் தெரிவித்துள்ளது.
“இந்த ஸ்கூட்டர்கள் எங்கள் சேவை பொறியாளர்களால் பரிசோதிக்கப்படும். பேட்டரி அமைப்புகள், வெப்ப அமைப்புகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் முழுவதும் முழுமையான ஆய்வு செய்யப்படும்” என்று கூறியுள்ளது.மேலும், பேட்டரிகள் யாவும் ஏற்கனவே AIS 156 சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த சோதனை என்பது இந்தியாவிற்காக அண்மையில் முன்மொழியப்பட்ட தரநிலையாகும். கூடுதலாக ஐரோப்பிய தரநிலையலையான ECE 136 முறையிலும் சோதிக்கபடும் என்று ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அண்மை காலமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்சார இரு சக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதன் காரணமாக வாகனங்களைத் திரும்பப் பெறுமாறு உற்பத்தியாளர்களை வேடிக்கையாளர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.
ஒகினாவா ஆட்டோடெக் 3,000 இரு சக்கர வாகனத்திற்கு மேல் திரும்பப் பெற்றது. தீ விபத்துகள் குறித்த காரணத்தை அறிய விசாரணைக் குழுவை ஆய்வு செய்வதற்காக அமைத்துள்ளது. மேலும், நிறுவனங்கள் அலட்சியமாக இருப்பது கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.
Source: ndtv
பெண்கள் பயப்படாதீங்க? Advocate Thilagavathi Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.