Aran Sei

2020-21 இல் தேர்தல் அறக்கட்டளைகள் ரூ.258.49 கோடி நிதியை அரசியல் கட்சிகளுக்கு கொடுத்துள்ளன: ரூ.212.05 கோடி நிதி பெற்று பாஜக முதலிடம்

2020-21 நிதியாண்டில் 7 தேர்தல் அறக்கட்டளைகளிடமிருந்து ரூ.258.49 கோடியை அரசியல் கட்சிகள் வாங்கியுள்ளன. அதில் ரூ.212.05 கோடி அதாவது 82% பாஜக பெற்றுள்ளது என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தெரிவித்துள்ளது.

கார்ப்பரேட்களிடமிருந்து 720 கோடியை நன்கொடையாக பெற்ற பாஜக -ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தகவல்

தேர்தல் அறக்கட்டளை என்பது கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து அரசியல் கட்சிகளுக்கு முறையாக நன்கொடைகளைப் பெறுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும்.

ஐக்கிய ஜனதா தளம் கட்சி ரூ.27 கோடி அதாவது 10.45% நன்கொடைகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.

4,847 கோடி சொத்து மதிப்புடன் இந்தியாவின் பணக்கார கட்சியாக மாறிய பாஜக – ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தகவல்

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், அதிமுக, திமுக, ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஆம் ஆத்மி, லோக் ஜனசக்தி கட்சி, சிபிஎம், சிபிஐ மற்றும் லோக்தந்திரிக் ஜனதா தளம் ஆகிய 10 அரசியல் கட்சிகளும் இணைந்து 19.38 கோடி ரூபாயை நன்கொடைகளாகப் பெற்றுள்ளன.

Source : the hindu

2020-21 இல் தேர்தல் அறக்கட்டளைகள் ரூ.258.49 கோடி நிதியை அரசியல் கட்சிகளுக்கு கொடுத்துள்ளன: ரூ.212.05 கோடி நிதி பெற்று பாஜக முதலிடம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்