“மக்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் மாநில தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாகியுள்ளது. திமுகவின் வெற்றிக்காக மாநில தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட நாடகம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல். தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையையாவது நேர்மையாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் முன் வருமா என்று கேள்வி எழுப்பி இந்தியத் தேர்தல் ஆணையத்தை ட்விட்டரில் டேக் செய்திருந்தார்.
இதற்கு பதிலளித்த இந்தியத் தேர்தல் ஆணையம், ”கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்களை நடத்துவது இந்திய தேர்தல் ஆணையம் இல்லை. அவை, இந்திய அரசியலமைப்பின் பிரிவு 243 K & 243 ZA இன் கீழ் தனி அதிகாரிகளால், அதாவது மாநில தேர்தல் ஆணையங்களால் நடத்தப்படுகின்றன. உங்கள் புகாருக்காக சம்பந்தப்பட்ட அதிகாரியை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்” என்று இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.