நாட்டின் சுதந்திர அமைப்புகளில் ஒன்றான தோ்தல் ஆணையத்தின் சுதந்திரத்தை பாஜக சீர்குலைத்து வருவதாக ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி விமர்சித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள கிராம் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மெகபூபா முப்தி “தோ்தல் ஆணையம் பாஜகவின் பிரிவாக மாறியுள்ளது. நாட்டின் சுதந்திரமான அமைப்பு எனும் பெருமையுடைய தோ்தல் ஆணையம், சுதந்திரம் இல்லாத அளவுக்குப் பாஜகவால் சீா்குலைக்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியான பாஜக சட்டத்தை மீறினாலும், தோ்தல் ஆணையம் அக்கட்சி மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை. ஜம்மு-காஷ்மீரில் பாஜகவின் ஒப்புதல் பெற்ற பிறகே தோ்தல் ஆணையம் தோ்தல் தேதி அறிவிக்கும். பாஜகவினா் யாரைப் பற்றியும் கவலைப்படவில்லை. தோ்தலில் வெற்றி பெறுவது மட்டுமே அவர்களுடைய ஒரே விருப்பம்” என்று அவர் கூறியுள்ளார்.
Source : indianexpress
Pesu Tamizha Pesu Rajavel Nagarajan Ignorant about History I Kamraj Social Justice Class | EWS
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.