Aran Sei

காஷ்மீர் நிலவரங்கள் தொடர்பாக செய்தி அறிக்கைகள் – காவல்துறை மிரட்டுவதாக கேரவன் பத்திரிக்கையாளர் குற்றச்சாட்டு

Credit: The Wire

காஷ்மீரின் நிலவரம்குறித்து தி கேரவன் இணையதளத்தில் செய்திகள் வெளியிட்டதற்காக தன்னையும் குடும்பத்தினரையும் நான்கு மாதங்களாக காவல்துறையினர் அச்சுறுத்தி வருவதாக பத்திரிக்கையாளர் ஷாஹித் தந்த்ரே தெரிவித்துள்ளார்.

ஜுன் 8, அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ”தி கேரவன் ஊடக வழங்கிய பணிகளை மேற்கொண்டதற்காக ஜனவரி மாதத்தில் முதல் ஸ்ரீநகரில் இருந்து ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் பின் தொடர்ந்து வருவகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

”370வது சட்டப்பிரிவு நீக்கியபிறகு காஷ்மீரில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகங்கள்மீதான ஒடுக்குமுறை” குறித்தும், ஜம்மு காஷ்மீரின் தேசியவாத போராட்டங்களில் இந்திய ராணுவத்ததின் பங்கு குறித்தும் ஷாஹித் தந்த்ரே எழுதியிருந்த கட்டுரைகள் தி கேரவன் இணையதளத்தில் வெளியானது.

காஷ்மீர் பண்டிட்களுக்கு மகாராஷ்டிரா அரசு உறுதியாக நிற்கிறது – மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்ரே

முதல் கட்டுரை பிப்ரவரி 1 ஆம் தேதியும், இரண்டாவது கட்டுரை ஜூன் 1 ஆம் தேதியும் வெளியாகியிருந்தது.

இந்த கட்டுரைகளுக்காக தானும் தனது தந்தையும் பல முறை காஷ்மீரில் உள்ள காவல் நிலையங்களுக்கு வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதாக தந்த்ரே தெரிவித்துள்ளார்.

காஷ்மீர்: குறிவைக்கப்பட்ட தாக்குதல்களை கையாள ஒன்றிய அரசு பயன்படத்திய திட்டம் தோல்வி – சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல்

பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் நடைபெற்ற குறிப்பிட்ட சம்பவத்தை நினைவு கூர்ந்த தந்த்ரே,”காஷ்மீரின் தற்போதைய நிலைமை நன்றாக இல்லை என்பதால், எதையும் எழுத முடியும் என்பதில்லை. இது ஐரோப்பா இல்லை.” என்று மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.

நீண்ட வாழ்க்கை இருப்பதாக, ஆபத்தான வேலையைச் செய்ய வேண்டாம். ஒவ்வொரு பாதுகாப்பு நிறுவனமும் உங்களுக்குப் பின்னால் இருக்கிறது என்று அந்த அதிகாரி கூறியதாக தந்த்ரே தெரிவித்துள்ளார்.

காஷ்மீர்: பண்டிட்கள் மீதான தொடர் தாக்குதல் – இஸ்லாமியத் தலைவர்கள், சிவில் உரிமைகள் அமைப்பு கண்டனம் 

மேலும், விரைவில் திருமணம் செய்துகொள்ளுமாறு ஆலோசனை வழங்கியதாக தந்த்ரே குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது கட்டுரைகளில் மேற்கோள் காட்டிய ஆதாரங்களைப் பற்றிய தகவல்களை வெளிப்படுத்துமாறு பல முறை அதிகாரிகளால் கேட்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

சமீபத்தில் ஜூன் 4ம் தேதி, என்னைப் பற்றி விசாரிக்க எனது தந்தையை காஷ்மீரில் உள்ள ரெங்ரெத் காவல்துறையினர் வரவழைத்தனர். அவர் நான் ஒரு அறிக்கைக்காக டெல்லி வரை சென்றிருப்பதாக பதிலளித்திருந்தார்.

இடமாறுதல் கோரிக்கையை ஏற்க மறுத்த ஒன்றிய அரசு – காஷ்மீர் பள்ளதாக்கை விட்டு வெளியேறும் பண்டிட்கள்

அதைத் தொடர்ந்து, ஜூன் 5 ஆம் தேதி, ஒரு துணை காவல் கண்காணிப்பாளர் தனது தந்தையை அழைத்து, “அவர் காஷ்மீருக்கு வருவாரா அல்லது நாங்கள் டெல்லிக்கு ஒரு தேடுதல் குழுவை அனுப்ப வேண்டுமா என்பதை அரை மணி நேரத்தில் சொல்லுங்கள்” என்று கூறியுள்ளார்.

அதே நாளில், கேரவனின் அரசியல் ஆசிரியர் ஹர்தோஷ் சிங் பால், சம்பந்தப்பட்ட துணை காவல் கண்காணிப்பாளரை அழைத்து, நான் ஒரு செய்தி பணிக்காக டெல்லியில் இருப்பதாகவும், அவரைப் பற்றி ஏன் விசாரிக்கிறீர்கள் என்று கேட்டதாகவும் தந்த்ரே கூறுகிறார்.

Source: The Wire

வெளியான மிரட்டல் கடிதம் வெளிவராத பகீர் உண்மைகள் Vikraman Interview | Nupur Sharma | Arab Countries

காஷ்மீர் நிலவரங்கள் தொடர்பாக செய்தி அறிக்கைகள் – காவல்துறை மிரட்டுவதாக கேரவன் பத்திரிக்கையாளர் குற்றச்சாட்டு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்