Aran Sei

திரிணாமூல் பஞ்சாயத்து தலைவர் கொல்லப்பட்ட சிறிது நேரத்தில் 8 வீடுகளுக்கு தீ வைப்பு -2 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு

மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள ராம்பூர்ஹத் என்ற இடத்தில் எட்டு வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் (மார்ச் 21), திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளதாக காவல்துறையின் தலைமை இயக்குநர் மனோஜ் மாளவியா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

எரிந்த வீடுகளில் ஒன்றில் இருந்து எரிந்த நிலையில் ஏழு உடல்கள் மீட்கப்பட்டதாகவும், காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் சிஏஏ எதிர்ப்பு போராளி மர்ம மரணம் – சிபிஐ விசாரணை கோரும் தந்தை

இந்த சம்பவம் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறையின் தலைமை இயக்குநர் மனோஜ் மாளவியா கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் (மார்ச் 21) இரவு 8.30 மணியளவில் பர்ஷால் கிராமத்தின் பஞ்சாயத்து துணைத் தலைவரான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாது ஷேக் கொல்லப்பட்ட சிறிது நேரத்தில், ராம்பூர்ஹத் நகரில் உள்ள இந்த எட்டு வீடுகளுக்குத் தீவைக்கப்பட்டுள்ளது.

ராம்பூர்ஹத் காவல் நிலைய அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து விசாரிக்க கூடுதல் டிஜிபி ஞானவந்த் சிங் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அம்மாநில அரசு அமைத்துள்ளது.

ஆளுநர் ஒத்துழைக்காவிட்டால் பல்கலைக் கழங்களுக்கு முதலமைச்சரை வேந்தராக அறிவிப்போம் – மேற்கு வங்க கல்வி அமைச்சர்

இச்சம்வம் தொடர்பாக அடுத்த 72 மணி நேரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி மேற்கு வங்க தலைமைச் செயலாளருக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.

ஒன்றிய அரசின் இம்முடிவை அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வரவேற்றுள்ளதோடு, வன்முறை தொடர்பாக குடியரசுத் தலைவரை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இவ்வன்முறை சம்பவத்திற்கு காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Source: PTI

திரிணாமூல் பஞ்சாயத்து தலைவர் கொல்லப்பட்ட சிறிது நேரத்தில் 8 வீடுகளுக்கு தீ வைப்பு -2 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்