திருத்தப்பட்ட பள்ளி பாடப்புத்தகங்கள் தொடர்பாக சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பள்ளி கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷிடம் அறிக்கை கோரியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பசவராஜ் பொம்மை, “பள்ளி பாடப்புத்தகங்கள் திருத்தப்பட்டது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் அவர்களிடம் அறிக்கை கேட்டுள்ளேன். அவரும் விரைவில் அறிக்கை சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா: கல்வி காவிமயம் ஆவதை கண்டித்து கல்வியாளர்கள் பலர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து எதிர்ப்பு
ரோஹித் சக்ரதீர்த்தா தலைமையிலான ஒரு பாடப்புத்தகங்கள் திருத்தக் குழு, சமூக அறிவியல் மற்றும் கன்னட மொழிப் பாடப்புத்தகங்களை ஆய்வு செய்து, அண்மையில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான சமூக அறிவியல் பாடப்புத்தகங்களையும், 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை கன்னட மொழி பாடப்புத்தகங்களையும் திருத்தியது.
இதில், சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங், மைசூர் ஆட்சியாளர் திப்பு சுல்தான், லிங்காயத்து சமூக சீர்திருத்தவாதி பசவண்ணா, திராவிட இயக்க முன்னோடி பெரியார், சமூக சீர்திருத்தவாதி நாராயண குரு ஆகியோர் பற்றிய பகுதிகள் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
கன்னட கவிஞர் குவேம்பு பற்றிய உண்மைகளும் திரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் நிறுவனர் கேசவ் பாலிராம் ஹெட்கேவரின் உரை 10 ஆம் வகுப்பு திருத்தப்பட்ட கன்னட பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்டது பெரும் சர்ச்சையை உருவாக்கியது.
கர்நாடகாவில் கல்வி காவிமயமாகி வருகிறது எனக்கூறி பல கல்வியாளர்கள், அறிஞர்கள் தங்களது அரசுப் பதவிகளை ராஜினாமா செய்து தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.
Source : india today
BJP கும்பலின் சாதி வெறி | Sangathamizhan Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.