கர்நாடக முதல்வர் எடியுரப்பா, நேற்று இரண்டு முறை அமைச்சரைவையில் மாற்றம் செய்துள்ளார். இது மாநில அமைச்சரவையின் அமைச்சர்கள் அறிவிக்கப்பட்ட நான்கு நாட்களுக்குள் நடக்கும் மூன்றாவது மாற்றமாகும். கடந்த வியாழக்கிழமை ஏழு அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. அவர்களில் ஐந்து பேர் புதிதாக அமைச்சர் பதவியைப் பெற்றுள்ளனர்.
முன்னதாக, பாஜகவின் உண்மையான தொண்டர்களை முற்றிலும் புறக்கணித்துவிட்டு விசுவாசம், சாதி, அனுபவம் என எதற்கும் முன்னுரிமை வழங்காமல் எடியூரப்பாவை ஒரு சிடியின் மூலமாக மிரட்டுபவர்களும் பெரிய அளவிலான பணத்தைக் கொடுப்பவர்களும் மட்டுமே கர்நாடக மாநில அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளதாக பாஜக மூத்த தலைவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
பாஜக ஆளும் நான்கு மாநிலங்களில் கட்சிக்குள் கலகம் : விபரங்கள்
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக செய்தியாளர்களிடம் பதிலளித்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா, ”பாஜக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அவர்கள் டெல்லிக்குச் செல்லலாம், நமது தேசியத் தலைவர்களைச் சந்தித்துப் புகார்களை கொடுக்கலாம். நான் அதை எதிர்க்க மாட்டேன், ஆனால் அவதூறாக பேசுவதன் மூலம் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம் என்று நான் அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன் ” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், நேற்று பிற்பகல் நடந்த அமைச்சரவை மாற்றத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகருக்கு கூடுதலாக மருத்துவக் கல்வித் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் சட்ட அமைச்சர் ஜே.சி மதுசாமி ஆரம்பத்தில் ஹஜ் மற்றும் வக்பு துறையைக் கொண்டிருந்தார். பின்னர் அவர் சுற்றுலா, சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் துறை அமைச்சகங்களின் பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார்.ஆனந்த் சிங் உள்கட்டமைப்பு மேம்பாட்டையும், ஹஜ் மற்றும் வக்பு இலாகாக்களை பெற்றுள்ளார்.
மங்களூர்: சிஏஏ போராட்டத்தின் ஓராண்டு நிறைவு – இன்றும் அச்சத்தில் வாழும் இஸ்லாமியர்கள்
அமைச்சரவை மாற்றம் தொடர்பாக பேசிய சுகாதாரம் மற்றும் மருத்துவ கல்வித்துறை அமைச்சர் சுதாகர் ”ஒரு அமைச்சர், சுகாதாரம் மற்றும் மருத்துவ கல்வித் துறைகளுடன் இணைந்து பணியாற்றுவது எளிதாக இருக்கும். இது தடுப்பூசி இயக்கத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு அவசியம்” என்று தெரிவித்துள்ளார்.
“தொற்றுநோயை ஒழிப்பதற்காக துறைகளை ஒன்றிணைக்க வேண்டிய அவசியம் உள்ளது. எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் ஒரு அமைச்சர் இரு துறைகளையும் கையாள வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
லவ் ஜிகாத்தைத் தடுக்க வேண்டும் : கர்நாடக முதல்வர் எடியூரப்பா
இந்த அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள புதிய அமைச்சர்கள், பல கட்சிகளிலிருந்து பாஜகவில் இணைந்து கர்நாடகத்தின் முதல்வராக எடியூரப்ப பொறுப்பேற்பதற்கு உதவியதால் தான் அமைச்சர் பதவிகளை பெற்றுள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது. கர்நாடக அமைச்சரவையில் நடந்துள்ள மாற்றத்திற்கு பாஜகவின் மூத்த தலைவர்கள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.