கர்நாடக மாநில அமைச்சரவையில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள ஏழு அமைச்சர்களுக்கு எதிராக பாஜகவின் மூத்த சட்டமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடியை உயர்த்தியுள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் கர்நாடகாவில் எம்.டி.பி.நாகராஜ், உமேஷ் கட்டி, அரவிந்த் லிம்பாவலி, முருகேஷ் நிரானி, ஆர்.ஷங்கர், சி.பி.யோகேஷ்வர், எஸ்.அங்காரா ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ள பாஜகவின் மூத்த சட்டமன்ற உறுப்பினர்கள் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை மிரட்டுபவர்கள் மட்டுமே அவருடைய நெருங்கிய வட்டத்திலும் அமைச்சரவையிலும் இடம் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
கர்நாடக மேலவையில் பாஜகவிற்கு பலமில்லை – நிறைவேறுமா பசுவதை தடுப்புச் சட்டம்?
எடியூரப்பாவை ஒரு சிடியின் (குறுந்தகடு) மூலமாக மிரட்டுபவர்களும் அவருக்கு பெரிய அளவிலான பணத்தைக் கொடுப்பவர்களும் மட்டுமே அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டிய பாஜக தலைவர் பசனகெள்டா ஆர் பாட்டீல், சிடியை வைத்து எடியூரப்பாவை மிரட்டிய மூன்று பேர்களில் ஒருவர் அரசியல் செயலாளராகவும் இரண்டு பேர் அமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் பசுவதை தடுப்பு சட்டம் – மாடுகளை ஏற்றிச் சென்றதாக முதல் வழக்கு
தங்களைப் போன்ற கட்சிக்கு விசுவாசமான தொண்டர்களை முற்றிலும் புறக்கணிப்பதாக கூறியுள்ள அவர் “விசுவாசம், சாதி, அனுபவம் என எதற்கும் முன்னுரிமை அளிகக்கப்படாமல் எடியூரப்பாவை ஒரு சிடியின் மூலமாக மிரட்டி வருபவர்கள் தான் அமைச்சராக்கப்பட்டுள்ளதாக” அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பாஜக நிர்வாகிகள் மீதான வழக்குகளை திரும்ப பெறும் முடிவு – கர்நாடக உயர்நீதிமன்றம் தடை
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக செய்தியாளர்களிடம் பதிலளித்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா, ”பாஜக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அவர்கள் டெல்லிக்குச் செல்லலாம், நமது தேசியத் தலைவர்களைச் சந்தித்து புகார்களை கொடுக்கலாம். நான் அதை எதிர்க்க மாட்டேன், ஆனால் அவதூறாக பேசுவதன் மூலம் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம் என்று நான் அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன் ” என்று கூறியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.