Aran Sei

‘ஊடகவியலாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து, கொரோனா தடுப்பூசியில் முன்னுரிமை தர வேண்டும்’ – பத்திரிகையாசிரியர்கள் சங்கம்

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் ஊடகவியலாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து, தடுப்பூசி வழங்குவதில் அவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதை உறுதி செய்யுமாறு மத்திய அரசை இந்திய பத்திரிகையாசிரியர்கள் சங்கம் (இஜிஐ) வலியுறுத்தியுள்ளது.

நேற்று (ஏப்ரல் 15), அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்றுநோய், தேர்தல்கள், பிற நாட்டு நடப்பு விவகாரங்கள் போன்றவற்றின் செய்திகளையும் தகவல்களையும் இடைவிடாமலும் தடையின்றியும் செய்தி நிறுவனங்கள் வாசகர்களுக்கு வழங்கி வருகின்றன என்று தெரிவித்துள்ளது.

’ஆன்லைன் ஊடகத்தின் கருத்து சுதந்திரம் காக்கப்பட வேண்டும்’ – பிரதமருக்கு பத்திரிகையாசிரியர் சங்கம் கோரிக்கை

“செய்தி ஊடகங்கள் அத்தியாவசிய சேவைகள் பட்டியலில் உள்ளன. ஆகவே, பத்திரிகையாளர்களும் முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்படுவதோடு, கொரோனா தொற்று எண்ணிக்கை விண்ணை முட்டும் அளவு அதிகரித்துள்ள சூழலில் அவர்களை தொற்றிலிருந்து பாதுகாப்பதில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.” என்று இந்திய பத்திரிகையாசிரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தடுப்பூசி கிடைக்க பெறாமல், தங்கள் தொழிற்சார் பொறுப்புகளை நிறைவேற்றுவது ஊடகவியலாளர்களுக்கு கடினமாக உள்ளது என்று சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Source : PTI

‘ஊடகவியலாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து, கொரோனா தடுப்பூசியில் முன்னுரிமை தர வேண்டும்’ –  பத்திரிகையாசிரியர்கள் சங்கம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்