தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் உள்ள கருத்துகளுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் திட்டமான “ரோஜ்கார் மேளா” திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக சென்னை அயனாவரத்தில் உள்ள அம்பேத்கர் அரங்கில் 250 இளைஞர்களுக்கான பணி ஆனையை ஒனிய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கினார்.
மேலும் இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை இது முக்கியமான நாள். தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கோவையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு உள்ளது.சென்ற ஆண்டு 10 ஆம் வகுப்பில் 52,000 பேர் தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். பல தமிழ் வழி பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. தாய்மொழியை வளர்க்க திமுக என்ன செய்துள்ளது.
துப்பாக்கிச் சூடு பற்றி எடப்பாடி பழனிச்சாமி தொலைக்காட்சியில் பார்த்ததாக சொன்னது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், இதில் என்ன தவறு இருக்கிறது. 5 மணி நேரத்திற்கு மேலாக நடந்த விசயம் அவை. துப்பாக்கிச் சூடு நடத்தியது தவறா? நடத்திய விதம் தவறு. எடப்பாடி சொன்ன ஒரு கருத்தைத் திரித்துச் சொல்வது சரி இல்லை.
ரஜினி சொன்ன கருத்துக்குப் பதிலளித்த அண்ணாமலை, கையில் ஒரு கல்லை எடுத்து எறிந்தால் எங்கள் அகராதியில் சமூக விரோதி தான். எனவே, பொதுச் சொத்துகளைச் சேதாரம் செய்தார்கள் நாங்கள் சமூக விரோதி என்றோம்.
திருமாவளவன், சீமான், கனிமொழி, மு.க.ஸ்டாலின் இவர்கள் எல்லாம் கருத்துச் சொல்லவில்லையா ? ஆனால் காவல் துறை அறிக்கை வந்தால் அது வேறு மாதிரிதான் இருக்கும்.
ரஜினிகாந்த் கூறிய கருத்து பற்றி ஆணையம் சொல்லிய கருத்தைப் பாஜக எதிர்க்கிறது. திரைப்படங்களில் பலர் கருத்து சொல்கிறார்கள் அதைக் கேட்க வேண்டிய தானே என்று அண்ணாமலை கூறினார்.
Source : dailythanthi
இந்தி தெரியாது போடா…| இடியட் சங்கி சேஷாத்ரிக்கு வைச்ச ஆப்பு | Aransei Roast | Hindi | BJP
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.