Aran Sei

முன்னாள் பிரதமர் நேருவின் சமாதிக்கு விரைவில் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பக்கூடும்: சஞ்சய் ராவத் கிண்டல்

ந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவிடத்திற்கு அமலாக்கத்துறை விரைவில் நோட்டீஸ் அனுப்பக்கூடும் என்று சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குநரகம் முன் ஆஜராகுமாறு தெரிவித்ததை குறிப்பிட்டுப் பேசிய சிவசேனா நாடாளுமன்ற சஞ்சய் ராவத் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வீழ்ச்சியடைந்து வரும் நேருவின் இந்தியா – சிங்கப்பூர் பிரதமர் பிரதமர் லீ சியென் லூங்

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மற்றும் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி ஆகியோருக்கு 2011-12 நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறை நேற்று (ஜூன் 1) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது சம்பந்தமாக பேசிய சஞ்சய் ராவத், “இன்று சோனியா மற்றும் ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை நோட்டிஸ் அனுப்பியுள்ளது. அவர்கள் எங்களிடமிருந்து தொடங்கி சோனியா காந்தி வரை சென்றடைந்துள்ளனர். இந்த வழக்கு ஆங்கிலேயர்களுக்கு எதிராக நேருவால் தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு செய்தித்தாள் தொடர்பானது. ஜவஹர்லால் நேருவின் நினைவிடத்திற்கு மேல் அமலாக்கத்துறை விரைவில் நோட்டீஸ் ஓட்டுவதை நாம் விரைவில் காணலாம்” என்று தெரிவித்துள்ளார்.

Source : india today

இந்த சவுண்ட்லாம் இங்க வேணாம் Annamalai | Surya Xavier Interview

 

முன்னாள் பிரதமர் நேருவின் சமாதிக்கு விரைவில் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பக்கூடும்: சஞ்சய் ராவத் கிண்டல்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்