Aran Sei

வங்கி ஊழியர்கள் ஒப்பந்த முறைப்படி நியமனம் – பாரத ஸ்டேட் வங்கி முடிவு

நாட்டிலேயே முதல்முறையாக பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஒப்பந்த முறைப்படி பணியாளர்களை எடுக்க உள்ளது. 8,500 காலியிடங்களை ஒப்பந்த ஊழியர்கள் மூலம் நிரப்ப இருப்பதாக விளம்பர அறிவிப்பை எஸ்பிஐ தன்னுடைய இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியின் இந்த நடவடிக்கை குறித்து, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலளார் வெங்கடாச்சலம் அவர்களிடம் அரண்செய் பேசியது. அப்போது அவர் “கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவில் வேலைஇல்லாத் திண்டாட்டம் இருந்து வருகிறது. அதைச் சரி செய்வதற்கான எந்த நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் எடுக்கவில்லை” என்று கூறினார்.

“பணியிடங்களையும் நிந்தர ஊழியர்களை வைத்து நிரப்புவதே நியமானது. ஒப்பந்தம் முடிந்தவுடன் வேலையில் இருந்தவர்களின் வாழ்க்கைக்கு அரசு, வங்கி இரண்டும் உத்தரவாதம் கொடுக்குமா” என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

அரசு, மக்கள் நலன் கருதி நிரந்தர ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்றும் ஒப்பந்த ஊழியர்களை வைத்து நிரப்புவதால் மாபெரும் பின்னடைவை வங்கி சந்திக்கும் என்றும் வெங்கடாச்சலம் கூறினார்.

வங்கி ஊழியர்கள் ஒப்பந்த முறைப்படி நியமனம் – பாரத ஸ்டேட் வங்கி முடிவு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்