வாராக் கடன்களால் இந்திய வங்கிகளுக்கு ரூ. 3,53,655 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (ஏஐபிஇஏ) தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில், “வங்கிகளின் வாராக் கடன் தொடர்பாக 7.2.2022 ஆம் தேதி மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு ஒன்றிய அரசு பதிலளித்துள்ளது. இதில், 2016 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திவால் மற்றும் திவால் நிலை குறியீடு சட்டம் மற்றும் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் தரவுகளின் படி இந்திய வங்கிகளில் இருந்து ரூ. 5,44,434 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.” என கூறப்பட்டுள்ளது.
இதில், 65 விழுக்காடு கடன் தொகை தள்ளுபடி செய்ப்பட்டுள்ளது. இதனால் வங்கிகளுக்கு ரூ. 3,53,655 கோடிவரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஏஐபிஇஏ தெரிவித்துள்ளது
”பல்வேறு துறைகளை சேர்ந்த 42 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஒரு நிறுவனத்திற்கு என அதிகபட்சமாக 99 விழுக்காட்டில் இருந்து குறைந்தபட்சமாக 11 விழுக்காடு வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது” என ஏஐபிஇஏ செய்திகுறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.