இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அந்நாட்டில் இருந்து அகதிகளாக ஐந்து குடும்பங்களை சேர்ந்த 15 பேர் தனுஷ்கோடிக்கு வந்தடைந்துள்ளார்.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே வருகின்றது. பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக கோரி பொதுமக்கள் வீதியில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொருளாதார நெருக்கடியால் வாழ வழியிழந்து இலங்கையிலிருந்து அகதிகளாக ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு வர தொடங்கியுள்ளனர். இவ்வாறு, இதுவரை இலங்கை தமிழர்கள் 39 பேர் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர்.
‘ஸ்டாலினின் கரங்கள் இனவரம்பில்லாமல் எல்லா இலங்கையருக்காவும் நீள வேண்டும்’ – இலங்கை எம்.பி., கோரிக்கை
இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 25), இலங்கையில் இருந்து நான்கு கைக்குழந்தைகள் உட்பட ஐந்து குடும்பங்களை சேர்ந்த 15 பேர் தனுஷ்கோடி அடுத்த இரட்டை தலைப்பகுதியில் தஞ்சமடைந்துள்ளனர். ஆபத்தான முறையில் கடல் கடந்து இவர்கள் வந்துள்ளன.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கடலோர காவல் குழும காவலர்கள் மற்றும் கியூ பிரிவு காவலர்கள் உரிய விசாரணை நடத்திய பின்னர், அவர்களை மண்டபம் கடலோர காவல் குழுமம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அதைத் தொடர்ந்து, அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நன்றி: புதிய தலைமுறை
“அண்ணாமலை நேரடியா கமலாலயம் வரேன்”
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.