மேற்கு வங்க சட்டப்பேரவைக்கான தேர்தலுக்கான பிரச்சாரத்தில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக, மம்தா பானர்ஜி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள 24 மணி நேரம் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இஸ்லாமிய வாக்காளர்கள் தொடர்பாகவும், மத்திய பாதுகாப்பு படைகளுக்கு எதிராக மக்களைத் தூண்டி விடும் வகையில் பேசியதற்காக மம்தாவிற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
மம்தாவின் பேச்சு, தேர்தல் நடத்தை விதிகள் சட்டம் 1951 மற்றும் பிரிவுகளை மீறுவதாக உள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கொரனோ தடுப்பூசி அனைத்து வயதினருக்கும் வழங்க வேண்டும் – உச்சநீதி மன்றத்தில் மனு
ஏப்ரல் 12 ஆம் தேதி இரவு 8 மணி முதல் ஏப்ரல் 13 தேதி இரவு 8 மணிவரையில் எந்த வகையிலும் மம்தா பிரச்சாரம் மேற்கொள்ளத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையர் பதவியில் இன்று ஓய்வு பெறும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பிறத்தித்த கடைசி உத்தரவு இது என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.