Aran Sei

”என்னை விடுதலை செய்யுங்கள்” – துபாய் இளவரசி ஷேக்கா லத்திபா காணொளி மூலம் கோரிக்கை

பிபிசி-யின் புலனாய்வு செய்தி நிகழ்ச்சியான ’பனரோமா’ நேற்று (பிப்ரவரி 16), காணொளி ஒன்றை வெளியிட்டது. அதில் ஐக்கிய அரபு அமீரக பிரதமரின் மகள்களில் ஒருவரான ஷேக்கா லதீபா, “என் விருப்பத்திற்கு எதிராக என்னை அடுத்து வைத்துள்ளனர்” எனக் கூறுவது பதிவாகியுள்ளது.

”நான் பிணையக் கைதியாக இருக்கிறேன். இந்த மாளிகை, சிறைச்சாலையாக மாற்றப்பட்டிருக்கிறது” என 35 வயதாக லதீபா கூறும் காணொளியைப் பிபிசி அந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பி உள்ளது.

”எல்லா ஜன்னல்களும் பூட்டப்பட்டிருக்கிறது, என்னால் எதையும் திறக்க முடியவில்லை” என்று குளியலறையிலிருந்து பதிவு செய்யப்ப்டட அந்த காணொளியில் லத்திபா தெரிவித்துள்ளார்.

காணொளி எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்பதை உறுதி செய்ய முடியவில்லை என, பிபிசி தெரிவித்துள்ளது.

‘அதிகார மோகமுள்ள கிரண்பேடியின் காலதாமதமான நீக்கம் பாஜகவின் கபட நாடகம்’ – ஸ்டாலின் விமர்சனம்

லதீபாவின் விடுதலைக்காகப் போராடி வரும் ஃப்ரீ லதீபா (Free Latifa) அமைப்பு, லதீபாவிடம் ஒரு போனை யாருக்கும் தெரியாமல் வழங்கியதாக கூறியுள்ளது.

ஃப்ரீ லதீபாவின் பிரச்சார அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரும், லதீபாவின் வழக்கறிஞருமான டேவிட் ஹைக், லத்திபாவுக்கு எதிரான மனித உரிமை மீறலை முடிவுக்கு கொண்டு வந்து, அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.

துபாய் அரசு மக்கள் தொடர்புத்துறை, லதீபாவின் காணொளி தொடர்பாக, ஷேக் முகமதுவின் சட்ட நிறுவனத்திடம் விளக்கம் கோரி இருப்பதாகவும், இதுவரை அதற்கு எந்தப் பதிலும் வரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘மத்திய அரசு விவசாய சட்டங்களை விவசாயிகளிடம் கொடுத்து திருத்தம் செய்ய வேண்டும்’ – பாஜக மூத்த தலைவர் பரிந்துரை

அந்த வீடியோவில், எச்சரிக்கையுடன் தோன்றி அமைதியாகப் பேசும் லத்தீபா, மாளிகைக்கு வெளியேயும் உள்ளேயும் காவல்துறை அதிகாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதோடு,  “நான் சுதந்திரமாக இருக்க விரும்புகிறேன்,” என்றும் கூறுகிறார்.

2018 ஆம் ஆண்டு லதீபாவின் இருப்பிடம் தொடர்பான விவரங்களை தெரிவிக்குமாறு மனித உரிமைகள் அமைப்பு கோரிவிடுத்ததை அடுத்து, 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சகம், லதீபா அவரது வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருவதாகத் தெரிவித்திருந்தது.

Source : Reuters

”என்னை விடுதலை செய்யுங்கள்” – துபாய் இளவரசி ஷேக்கா லத்திபா காணொளி மூலம் கோரிக்கை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்