Aran Sei

‘ட்ரோன் சக்தி’: உயர பறக்கப்போவது விவசாயமா? ரிலையன்ஸா

பிப்ரவரி 1ஆம் தேதி, 2022-23ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரும் நிதியாண்டில் இருந்து, விவசாய நிலங்களை அளவிடுவதற்காக ட்ரோன்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படும் என்றும் இதற்காக ட்ரோன் சக்தி (Drone shakthi)  என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.

மேலும், ட்ரோன்களை பயன்படுத்தி பூச்சிக்கொல்லி மருந்துகள், ஊட்டச்சத்து மருத்துகள் ஆகியவை விவசாய நிலங்களில் தெளிக்கும் பணிகளும் மேற்கொள்ள ஊக்கவிக்கப்படும் என்று கூறியிருந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட வரியை விட 87.5 விழுக்காடு வரியை குறைத்து தாக்கல் செய்த ரிலையன்ஸ் – சட்டத்தின் ஓட்டைகள் பயன்படுத்தப்படுகிறதா?

அதைத்தொடர்ந்து, பிப்பிரவரி  9ஆம் தேதி அன்று, வெளிநாட்டில் இருந்து ட்ரோன்களை இறக்குமதி செய்ய ஒன்றிய அரசு தடை விதித்தது.

அதற்கு அடுத்த நாளான பிப்பிரவரி 10ஆம் தேதி, புதிதாக ட்ரோன் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கவுள்ளதாக அறிவித்த ரிலையன்ஸ் நிறுவனம், “இந்தியாவின் மாபெரும் ட்ரோன் உற்பத்தியாளராக நாங்கள் மாறுவோம்” என்று நம்பிக்கை தெரிவித்திருந்தது.

2030ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் 5 பில்லியன் டாலர் சந்தை மதிப்புள்ள ஒரு முக்கிய நிறுவனமாக மாற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தது.

நரேந்திர மோடி மைதானத்தில் ரிலையன்ஸ், அதானி முனைகள் – ராகுல் காந்தியின் ’நாம் இருவர், நமக்கு இருவர்’ கிண்டல்

ஆஸ்டீரியா ஏரோஸ்பேஸ் என்ற பெங்களூரை தலைமை இடமாகக் கொண்ட ஸ்டார்ட் அப் வழியாக ட்ரோன் வணிகம் மேற்கொள்ளப்பட உள்ளது. ஆஸ்டீரியா ஏரோஸ்பேஸ் நிறுவனமானது ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட்டின் துணை நிறுவனமாகும்.

இந்நிலையில், நேற்று(பிப்பிரவரி 11), மாநிலங்களவையில் பேசியுள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “இந்தியாவின் விவசாயத்தை மேம்படுத்துவதற்கும் நவீனமயமாக்குவதற்கும் பயனுள்ள ஒரு கருவியாக ட்ரோன்களை கொண்டு வருகிறோம்” என்று கூறியுள்ளார்.

Source: The Hindu, The Mint

‘ட்ரோன் சக்தி’: உயர பறக்கப்போவது விவசாயமா? ரிலையன்ஸா

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்