மத்தியப்பிரதேசத்தில் பசும்பால் குடிக்கவும், மதுவை தவிர்க்கவும் என்று மதுக்கடைகளுக்கு முன்பாக மாடுகளை கட்டி பாஜக மூத்த தலைவர் உமாபாரதி பிரச்சாரம் மேற்கொண்டார்.
பாஜக ஆளும் மாநிலத்தில் மது விற்பனைக்கும் அருந்துவதற்கும் எதிரான பிரச்சாரத்தை மத்திய பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான உமா பாரதி மேற்கொண்டுள்ளார். அதன்படி, மத்தியப் பிரதேச மாநிலம் ஓர்ச்சா நகரில் உள்ள மதுபானக் கடையின் முன்பு சாலைகளில் திரிந்த மாடுகளை இழுத்து கட்டி அதற்கு வைக்கோல் ஊட்டினார். பின்னர், பசும்பால் குடிக்கவும், மதுவைத் தவிர்க்கவும் என்ற பிரசாரத்தை மேற்கொண்டார்.
மேலும் அவர், குடிப்பழக்கத்தை அரசாங்கம் பணமாக்கக் கூடாது என்றும் கூறினார். மது விற்பனைக்கு எதிராக, கடந்த ஆண்டு ஜூன் மாதம் இதே மதுபானக் கடையில் பாஜக தலைவர் உமாபாரதி மாட்டுச் சாணத்தை வீசினார். மார்ச் 2022ல், போபாலில் உள்ள ஒரு மதுபானக் கடை மீது கல் எறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : NDTV
Kalaignar Pen statue Issue – Jenram Interview | Kalaignar Pen Silai | kalaignar pen seeman speech
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.