இந்தியா என்னுடையதும் அல்ல; தாக்கரேவுடையதும் அல்ல; பிரதமர் மோடியுடையதோ அமித்ஷாவுடையதோ அல்ல. இந்தியா யாருக்கும் சொந்தமானது என்றால் அது திராவிடர்களுக்கும் பழங்குடிகளும்தான். முகலாயர்களுக்குப் பிறகுதான் பாஜக-ஆர்எஸ்எஸ் உருவானது என்று நாடாளுமன்ற உறுப்பினரும் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவருமான அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.
சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத்துக்காக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் பிரதமர் மோடியைச் சந்தித்தது போல், நவாப் மாலிக் கைது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை ஏன் சந்திக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக, என்சிபி, காங்கிரஸ், (சமாஜ்வாடி) ஆகியவை மதச்சார்பற்ற கட்சிகள். இக்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சிறைக்கு செல்லக்கூடாது என்று நினைக்கிறார்கள். ஆனால் இந்த கட்சியில் இருக்கும் இஸ்லாமியர் சிறைக்குச் செல்கிறார்.. சஞ்சய் ராவத் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று பிரதமர் மோடியை வற்புறுத்துவதற்காக சரத் பவார் பிரதமர் மோடியை சந்திக்க செல்கிறார். நவாப் மாலிக்கிற்கு பவார் ஏன் அதை செய்யவில்லை என்று தேசியவாத காங்கிரஸ்கார்ர்களிடம் கேட்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
சஞ்சய் ராவுத்தை விட நவாப் மாலிக் குறைந்தவரா? நவாப் மாலிக்கிற்காக நீங்கள் ஏன் பேசவில்லை என்று நான் சரத் பவாரிடம் கேட்க விரும்புகிறேன்? அவர் ஒரு இஸ்லாமியர் என்பதனாலா? சஞ்சயும் நவாப்பும் சமமாக இல்லையா?” என்று ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.
Source: ndtv
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.