கொரோனாவை குணப்படுத்தும் மருத்தாக பதஞ்சலியின் கொரோனில் மருந்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என, மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் அறிக்கை வெளியிட வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கத்தின் (IMA) தேசியத் தலைவர் டாக்டர் ஜே.ஏ.ஜெயலால் தெரிவுத்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பதஞ்சலியால், கொரோனாவை குணப்படுத்தும் என்று விளம்பரப்படுத்தப்பட்ட கொரோனில் மருந்தின் அறிமுக நிகழ்ச்சியில் ஹர்ஷவர்தன் கலந்து கொண்டதற்கு ஆதரவாக, டெல்லி மருத்துவ சங்கம் கருத்து தெரிவித்ததற்கு பதிலளிக்கும் விதமாக, ஜெயலால் இவ்வாறு கூறியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் பாஜக தோல்வியடைந்தால் தேசத்திலிருந்தே தூக்கிய எறியப்படும் – மம்தா பானர்ஜி
இந்திய மருத்துவ சங்கம் ஒரு தொழில்முறை அமைப்பு என்பதை அடிகோடிட்ட ஜெயலால், அதன் தலைவராக “இந்தப் பொது வித்தை மேளா” குறித்து, 3.5 லட்சம் மருத்துவர்களின் விஞ்ஞான பார்வையை பகிர்ந்திருக்கிறேன் என ஜெயலால் தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.
இந்திய மருத்துவ சங்கத்தின் முந்தைய அறிக்கையில், பதஞ்சலியை ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய பரிசோதனைகளின் தன்மைகுறித்து கேள்வி எழுப்பியிருந்தது.
டாக்டர் ஹர்ஷ் வர்தன் தொடர்பாக இந்திய மருத்துவ சங்கம் ’ஆதாரமற்ற’ குற்றச்சாட்டுகளைக் கூறி வருவதாக விமர்சித்துள்ள டெல்லி மருத்துவ சங்கம், கொரோனில் அறிமுக விழாவில் ஹர்ஷவர்தன் ஒரு அமைச்சராக தான் கலந்து கொண்டார், ஒரு நவீன மருத்துவ பயிற்சியாளராக அல்ல எனத் தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.